Gold Price Today: இன்று தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளே நகை பிரியர்களுக்கு சர்ப்ரைஸ்

  • சென்னை: தங்கம் விலை (Gold Price Today) இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ள நிலையில், நம் ஊரிலும் வாரத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,13,520-க்கும், ஒரு கிராம் ரூ.14,190-க்கும் விற்பனை ஆன நிலையில் இன்று சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.

    Advertisement

    தங்கம் விலை கடந்த ஒரு மாதமாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. திடீரென ஏறும் தங்கம் விலை அப்படியே தலைகீழாக மீண்டும் குறையத் தொடங்கியது. குறைந்தபடியே வந்த தங்கம் விலை திடீரென ஏறுவதுமாக இருந்து வருகிறது. சர்வதேச சந்தைக்கு ஏற்ப நம் நாட்டில் இந்த தங்கம் விலையானது ஏற்ற இறக்கத்துடனேயே விற்பனை ஆகி வருகிறது.

    Advertisement

    தங்கம் விலை

    சென்னையில் கடந்த 2 ஆம் தேதி, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,800 குறைந்து ரூ.1,11,600-க்கு விற்பனை ஆனது. மறுநாள் அப்படியே தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது. மறுநாளே சவரனுக்கு ரூ.2,320 உயா்ந்து ரூ.1,13,920-க்கு விற்பனை ஆனது. மறுநாளும் சவரனுக்கு ரூ.960 உயா்ந்து, ரூ.1,14,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த சனிக்கிழமை தங்கம் விலையானது சவரனுக்கு ரூ.1,360 குறைந்து ரூ.1,13,520-க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ரூ.14,190-க்கு விற்பனை ஆகின்றது.

    நேற்று விடுமுறை என்பதால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கம் விலை டாலருக்கு 10 குறைந்து 4,418-க்கு விற்பனை ஆகின்றது. இதன்படியே நம் ஊரிலும் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.

    Advertisement

    இன்றைய ரேட் என்ன?

    இன்று சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.480 குறைந்து ரூ.1,13,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.60 குறைந்து ரூ.14,130-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை வாரத்தின் முதல் நாளே குறைந்து இருப்பது நகை பிரியர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கு விற்பனை ஆகின்றது.

    கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

    7.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,040 (இன்று)
    6.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,520
    5.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,520
    4.09.2026 - ஒரு சவரன் ரூ.1,14,880
    3.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,920
    2.09.2026 - ஒரு சவரன் ரூ. 1,11,600

    Advertisement

    1.09.2026 - ஒரு சவரன் ரூ.1,15,080
    31.08.2026 - ஒரு சவரன் ரூ.1,14,960
    30.08.2026 - ஒரு சவரன் ரூ.1.16,040
    29.08.2026 - ஒரு சவரன் ரூ.1.16,040

    28.08.2026 - ஒரு சாரன் ரூ.1,18,400 (மாலை)
    28.08.2026 - ஒரு சாரன் ரூ.1,17,200 (காலை)
    26.08.2026 - ஒரு சவரன் ரூ. 1,19,520
    25.08.2026 - ஒரு சவரன் ரூ. 1,17,800
    24.08.2026 - ஒரு சவரன் ரூ.1,20,240

    23.08.2026 - ஒரு சவரன் ரூ.1,19,600
    22.08.2026 - ஒரு சவரன் ரூ.1,19,600
    21.08.2026 - ஒரு சவரன் ரூ.1,18,800
    20.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,16,800

    17.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,14,160
    16.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
    15.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
    14.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600

    Advertisement

    13.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
    12.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600
    11.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,200
    10.08.2026 - ஒரு சவரன்- ரூ.111,600

    9.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
    8.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
    7.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
    6.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
    5.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,07,840

    4.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,600
    3.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,000
    2.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
    1.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760.

    English Summary

    Gold Price Today: Gold prices are likely to drop sharply today. Following a steep decline in international market rates, a drop in local gold prices is expected on this first day of the week. Currently, in Chennai, gold is trading at ₹1,13,520 per sovereign and ₹14,190 per gram, while silver is selling at ₹255 per gram.