சென்னை: தங்கம் விலை (Gold Price Today) இன்று தாறுமாறாக சரிந்துள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 குறைந்து நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. நேற்றும் தங்கம் விலை குறைந்து இருந்தது. கடந்த வாரம் முழுக்க தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில் தற்போது குறையத் தொடங்கியுள்ளது. தொடர்ச்சியாக சுப முகூர்த்த தினங்கள், பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் தங்கம் விலை சரியத் தொடங்கி இருப்பது நகை பிரியர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடப்பு ஆண்டு தொடக்கத்தில் புது வரலாற்று உச்சம் அடைந்த தங்கம் விலை கடந்த 5 மாதங்களாக தொடர்ந்து குறைந்து வந்தது. ஒரு சவரன் ரூ.1.34 லட்சம் வரை சென்ற நிலையில் அதற்கு பிறகு சுமார் 5 மாதங்களில் 30 ஆயிரம் வரை குறைந்தது. கடந்த 1 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,05,760 க்கு சரிந்தது.
தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த தங்கம் விலை கடந்த 5 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் மின்னல் வேகத்தில் உயரத் தொடங்கியது. காலை, மாலை என இரு வேளைகளிலும் தங்கம் விலை சரமாரியாக உயரத் தொடங்கியது. தினமும் தங்கம் விலை உயர்ந்து வந்ததால் மீண்டும் வரலாற்றில் இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டுவிடுமோ என நகை பிரியர்கள் அச்சமடைந்தனர். ஆனால் மீண்டும் தங்கம் விலை குறையத் தொடங்கியுள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.600 குறைந்தது. இப்படியாக கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.3.040 வரை தங்கம் விலை குறைந்து இருந்தது. ஆனால் நேற்று மாலை திடீரென தங்கம் விலை சரமாரியாக உயர்ந்தது. நேற்று மாலையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1200 அதிகரித்து ரூ.1,18,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை தாறுமாறாக சரிந்துள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 குறைந்துள்ளது. நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.600 குறைந்து ரூ.1,17,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.75 குறைந்து ரூ.14,650க்கு விற்பனை செய்யப்படது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,360 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1.16.040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.295 குறைந்து ரூ.14,505-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. சென்னையில் வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.260-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 29.08.2026 - ஒரு சவரன் ரூ.1.16.040 (இன்று) 23.08.2026 - ஒரு சவரன் ரூ.1,19,600 17.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,14,160 13.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760 9.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720 4.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,600தங்கம் விலை
இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்
28.08.2026 - ஒரு சாரன் ரூ.1,18,400 ( நேற்று மாலை)
28.08.2026 - ஒரு சாரன் ரூ.1,17,200 (நேற்று காலை)
26.08.2026 - ஒரு சவரன் ரூ. 1,19,520
25.08.2026 - ஒரு சவரன் ரூ. 1,17,800
24.08.2026 - ஒரு சவரன் ரூ.1,20,240
22.08.2026 - ஒரு சவரன் ரூ.1,19,600
21.08.2026 - ஒரு சவரன் ரூ.1,18,800
20.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,16,800
16.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
15.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
14.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600
12.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600
11.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,200
10.08.2026 - ஒரு சவரன்- ரூ.111,600
8.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
7.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
6.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
5.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,07,840
3.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,000
2.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
1.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760.