Gold Price Today: தங்கம் விலை இன்று தாறுமாறாக சரிவு.. ஒரே நாளில் 1,360 குறைந்தது.. உயர்ந்த வேகத்தில் வீழ்ச்சி

  • சென்னை: தங்கம் விலை (Gold Price Today) இன்று அதிரடியாக குறைந்துள்ளது. நேற்று உயர்ந்த நிலையில் இன்று அப்படியே தங்கம் விலை சரிந்துள்ளது. இன்று ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,360 குறைந்து ரூ.1,13,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Advertisement

    கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாக சரிந்து வந்த தங்கம் விலை கடந்த மாதம் 5 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் உயரத் தொடங்கியது. தினம் தினம் உயர்ந்ததால் நகை பிரியர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். கடந்த 6 மாதங்களாக ரூ.20 ஆயிரம் அளவில் சரிந்த தங்கம் விலை கடந்த மாதத்தில் 20 நாட்களிலேயே மீண்டும் சவரனுக்கு ரூ.15 ஆயிரம் வரை அதிகரித்தது.

    Advertisement

    தங்கம் விலை உயர்வு

    இதனால் மீண்டும் தங்கம் விலை உச்சத்திற்கு போய்விடுமோ என நகை பிரியர்கள் அச்சமடைந்தனர். ஆனால் தங்கம் விலை மீண்டும் சரியத் தொடங்கியது. கடந்த சில நாட்களாக மீண்டும் குறைந்து வந்த தங்கம் விலை நேற்று திடீரென உயர்ந்தது. நேற்று முன் தினம் ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2,320 அதிகரித்து நகை பிரியர்களுக்கு பெரிய ஷாக் கொடுத்தது. நேற்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,13,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் நேற்று முன் தினம் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.290 உயர்ந்து 14,240-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    Advertisement

    இன்றைய ரேட் என்ன

    நேற்றும் தங்கம் விலை உயர்ந்து சென்னையில் ஒரு சவரன் ரூ.1,14,840-க்கு விற்பனை செய்யபப்ட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அப்படியே தாறுமாறாக குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,320 குறைந்துள்ளது. இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,13,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.170 குறைந்து ரூ.14,190-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் குறைந்து வந்தது. நேற்று முன் தினம் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து இருந்தது. இன்று வெள்ளி விலை எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.255-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Advertisement

    கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

    5.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,520 (இன்று)
    4.09.2026 - ஒரு சவரன் ரூ.1,14,840
    3.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,920
    2.09.2026 - ஒரு சவரன் ரூ. 1,11,600

    1.09.2026 - ஒரு சவரன் ரூ.1,15,080
    31.08.2026 - ஒரு சவரன் ரூ.1,14,960
    30.08.2026 - ஒரு சவரன் ரூ.1.16,040
    29.08.2026 - ஒரு சவரன் ரூ.1.16,040

    28.08.2026 - ஒரு சாரன் ரூ.1,18,400 (மாலை)
    28.08.2026 - ஒரு சாரன் ரூ.1,17,200 (காலை)
    26.08.2026 - ஒரு சவரன் ரூ. 1,19,520
    25.08.2026 - ஒரு சவரன் ரூ. 1,17,800
    24.08.2026 - ஒரு சவரன் ரூ.1,20,240

    Advertisement

    23.08.2026 - ஒரு சவரன் ரூ.1,19,600
    22.08.2026 - ஒரு சவரன் ரூ.1,19,600
    21.08.2026 - ஒரு சவரன் ரூ.1,18,800
    20.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,16,800

    17.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,14,160
    16.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
    15.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
    14.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600

    13.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
    12.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600
    11.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,200
    10.08.2026 - ஒரு சவரன்- ரூ.111,600

    9.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
    8.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
    7.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
    6.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
    5.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,07,840

    Advertisement

    4.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,600
    3.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,000
    2.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
    1.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760.

    English Summary

    Gold Price Today: The price of gold has dropped sharply today. After surging dramatically yesterday, the price has now fallen significantly. In a single day, the price of a sovereign of gold has decreased by ₹1,360, bringing it to ₹1,13,520. The price of silver remains unchanged today, selling at ₹255 per gram.