சென்னை: கடந்த வாரம் முழுக்க தினமும் உயர்ந்து வந்த தங்கம் விலை (Gold Price Today) இன்று பெரிய அளவில் குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் ரூ.1,240 குறைந்து இருப்பது நகைப் பிரியர்களுக்கு சர்ப்ரைஸை கொடுத்துள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.560 அதிகரித்த நிலையில் இன்று ரூ.1,240 குறைந்து ரூ.1,05,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை போலவே இன்று வெள்ளி விலையும் தாறுமாறாக சரிந்துள்ளது.
தங்கம் விலை கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக உயர்ந்து வந்தது. வெறும் ஒரு சவரன் ரூ.57 ஆயிரம் என்று இருந்த தங்கம் விலை தினம் தினம் புதிய உச்சம் தொட்டு வந்தது. ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு நாளும் என தங்கம் விலை தினந்தோறும் புதிய வரலாற்று உச்சத்தினை தொட்டு வந்தது.
தங்கம் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்துகொண்டே சென்றது நகை பிரியர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குறிப்பாக பெண் குழந்தைகளை பெற்றவர்கள் எப்படி நகை வாங்குவது என கவலையடைந்தனர். தொடர்ந்து உச்சம் தொட்ட தங்கம் விலை இந்த ஆண்டு ஜனவரியில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது. ஜனவரி இறுதியில் ஒரு சவரன் ரூ.1.34 லட்சம் என்ற வராலாற்று உச்சம் தொட்டது. இதனால் நகை பிரியர்கள் பெரும் கவலையடைந்தனர். அதன்பிறகு ஈரான் அமெரிக்கா போரின் காரணமாக தங்கம் விலை சரிய தொடங்கியது. பெரிய அளவில் உயராமல் தங்கம் விலை குறைந்துகொண்டே வந்தது. கடந்த வாரம் முழுக்க தங்கம் விலை ஏற்றத்துடனேயே இருந்தது. தினமும் தங்கம் விலை அதிகரித்தே வந்த நிலையில் நேற்று வாரத்தின் தொடக்க நாளிலும் தங்கம் விலை உயர்ந்து மீண்டும் அதிர்ச்சி கொடுத்தது. இதனால் தங்கம் விலை இனி மேலும் உயர்ந்துவிடுமோ என அச்சமடைந்தனர். இந்த நிலையில் நகை பிரியர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் வகையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் தாறுமாறாக சரிந்துள்ளது. நேற்று சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,06,960-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ரூ.1,05,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.155 குறைந்து ரூ. 13,125-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையை போலவே இன்று வெள்ளி விலையும் அதிரடியாக சரிந்துள்ளது. இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. இதனால் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.235க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று சரிந்துள்ளது நகை பிரியர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. 28.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,720 (இன்று) 23-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,08,000 18-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,080தொடர்ச்சியாக சரிந்த தங்கம் விலை
தாறுமாறாக சரிந்த தங்கம், வெள்ளி விலை
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:
27.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,960
26-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,06,400
25-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,06,400
24-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,840
22-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,07,440
21-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
19-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,080
17-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,04,800
16-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,200
15-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,440.