சென்னை: தங்கம் விலை (Gold Price Today) கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக உயர்ந்து வந்த நிலையில் இன்று திடீரென சரிந்துள்ளது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து இருப்பது நகை பிரியர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலை மட்டுமின்றி வெள்ளி விலையும் இன்று அதிரடியாக சரிந்துள்ளது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரியில் இருந்து உச்சம் தொட ஆரம்பித்த தங்கம் விலை தொடர்ச்சியாக ஒரு ஆண்டு முழுக்கவே உயர்ந்தது. கடந்த ஆண்டு ஜனவரியில் ஒரு சவரன் ரூ.64,000 என்ற அளவில் இருந்த நிலையில், ஒரே ஆண்டில் தங்கம் விலை வரலாற்றில் இல்லாத அளவாக ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை ஆனது.
தினம் தினம் உச்சம் தொட்டு புது வரலாற்று உச்சத்தை தொட்ட தங்கம் விலை இந்த ஆண்டு பிப்ரவரியில் ரூ.1.34 லட்சத்தை தொட்டது. இது நகை பிரியர்களை பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர் பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா ஈரான் போர் காரணமாக மீண்டும் சரிய தொடங்கியது. எனினும் பெரிய அளவில் உயராமலும், குறையாமலும் இருந்து வந்தது. கடந்த 5 மாதங்களாக தொடர்ச்சியாக தங்கம் விலை சரிந்து வந்தது. கடந்த ஆகஸ்டு மாதம் 1 ஆம் தேதி தங்கம் விலை சுமார் ரூ.1,05,760 என்ற அளவுக்கு சரிந்தது. ஆனால் கடந்த 5 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் தங்கம் விலை மின்னல் வேகத்தை தொட்டுள்ளது. தடாலடியாக சரிந்து வந்த தங்கம் விலை கடந்த 10 நாட்களாக தாறுமாறாக உயர்ந்து வருகிறது. நேற்று மற்றும் நேற்று முன் தினமும் தங்கம் விலை உயர்ந்து நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.160 அதிகரித்து ரூ.1,14,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.20 அதிகரித்து ரூ.14,290-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.680 குறைந்து ரூ.1,13,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.85 குறைந்து ரூ.14,205-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நீண்ட நாட்களாக மாற்றமின்றி இருந்த வெள்ளி விலையும் இன்று அதிரடியாக சரிந்துள்ளது. சென்னையில் வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து இருப்பது நகை பிரியர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. 19.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,14,160 (இன்று) 13.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760 9.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720 4.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,600மீண்டும் ஏறத் தொடங்கிய தங்கம் விலை
இன்றைய தங்கம், வெள்ளி விலை
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:
18.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,14,320
17.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,14,160
16.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
15.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
14.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600
12.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600
11.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,200
10.08.2026 - ஒரு சவரன்- ரூ.111,600
8.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
7.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
6.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
5.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,07,840
3.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,000
2.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
1.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760.