Gold Price Today: தங்கம் விலை மீண்டும் உயர்வு! வார முதல் நாளே ஷாக்.. கதி கலங்கும் நகை பிரியர்கள்! ஒரு சவரன் ரேட் என்ன?

  • சென்னை: தங்கம் விலை (Gold Price Today) கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில், நடப்பு மாதம் 5 ஆம் தேதிக்கு பிறகு மின்னல் வேகத்தில் உயரத் தொடங்கியது. தொடர்ச்சியாக உயர்ந்து வரும் தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்ந்தது. வாரத்தின் முதல் நாளே தங்கம் விலை உயர்ந்துள்ளது நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    Advertisement

    சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.400 அதிகரித்து ரூ.1,14,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.50 அதிகரித்து ரூ.14,270-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை இன்று எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.255-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Advertisement

    தங்கம் விலை திடீர் உயர்வு

    தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாக குறைந்து வந்தது. குறிப்பாக பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதியில் இருந்து சரியத் தொடங்கிய தங்கம் விலை அதற்கு பிறகு பெரிய அளவில் உயராமல் இருந்து வந்தது. கடந்த 5 மாதங்களாக குறைந்து வந்த நிலையில் திடீரென தங்கம் விலை உயரத் தொடங்கியுள்ளது. கடந்த 5 ஆம் தேதியில் இருந்து தங்க விலை மீண்டும் உயர்ந்து வருகிறது.

    ஒரே நாளில் 2 ஆயிரம் என்ற அளவில் உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கச்சா எண்ணெய் விலை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    Advertisement

    இன்றைய ரேட் என்ன?

    நேற்று முன் தினம் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,220-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,760-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று விடுமுறை என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. இன்று வாரத்தின் முதல் நாளே தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.400 அதிகரித்து ரூ.1,14,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.50 அதிகரித்து ரூ.14,270-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலை கடந்த சில நாட்களாகவே மாற்றமின்றி இருந்து வருகிறது. அதன்பட்டி இன்றும் மாற்றமில்லை. சென்னையில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.255-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Advertisement

    கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:

    17.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,14,160 (இன்று)
    16.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
    15.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
    14.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600

    13.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
    12.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600
    11.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,200
    10.08.2026 - ஒரு சவரன்- ரூ.111,600

    9.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
    8.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
    7.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
    6.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
    5.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,07,840

    Advertisement

    4.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,600
    3.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,000
    2.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
    1.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760.

    English Summary

    Gold Price Today: While the price of gold had been declining over the past few months, it began to rise rapidly after the 5th of this month. Continuing its upward trend, the price of gold surged sharply again today. The fact that gold prices have risen on the very first day of the week has come as a shock to jewelry enthusiasts.