சென்னை: தங்கம் விலை நாளுக்கு நாள் போக்கு காட்டி வருகிறது. கடந்த வாரம் முழுக்க உயர்ந்து வந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் தினமும் பெரிய அளவில் குறைந்து இருந்தது. இந்த நிலையில், நேற்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.600 அதிகரித்த நிலையில், இன்று மீண்டும் சவரனுக்கு ரூ. 200 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் சவரனுக்கு ரூ. 50 ஆயிரம் விரை அதிகரித்ததால் மிடில் கிளாஸ் மக்களுக்கு தங்கம் எட்டாக் கனியாக மாறியுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.57 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. நடப்பு ஆண்டில் இது ஒரு லட்சத்தை தொட்டது. கடந்த ஜனவரி கடைசியில் ஒரு சவரன் ரூ.1.34 லட்சம் என்ற வரலாற்றில் இல்லாத உச்சத்தை தொட்டது.
இதைத்தொடரந்து, ஈரான் அமெரிக்கா போரின் காரணமாக தங்கம் விலை சரியத் தொடங்கியது. அதுவரை தினம் தினம் புதிய உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை பெரிய அளவில் உயராமல் குறைந்துகொண்டே வந்தது. கடந்த மாதமும் குறைவதும், உயர்வதுமாக இருந்து வந்தது. ஆனால் கடந்த வாரம் முழுக்க தங்கம் விலை ஏற்றத்துடனேயே இருந்தது. தினமும் தங்கம் விலை அதிகரித்தே வந்தது. இந்நிலையில் இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கட்கிழமையும் தங்கம் விலை அதிகரித்தது. இதனால் இனி மீண்டும் தங்கம் விலை உயருமோ என நகை பிரியர்கள் அச்சப்பட்ட நிலையில் இரு நாட்களுக்கு முன் தினம் தங்கம் விலை குறைந்து இன்ப அதிர்ச்சி தந்தது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,240 குறைந்து ரூ.1,05,720-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.155 குறைந்து ரூ. 13,125-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் ஒரே நாளில் சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.480 குறைந்து, ரூ.1,05,240க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.60 குறைந்து, ரூ.13,155க்கு விற்பனை செய்யப்பட்டது. 2 நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை நேற்று குறையுமா என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 அதிகரித்தது. இதனால் சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,05,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 75 அதிகரித்து ரூ.13,230-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் நேற்று எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.235க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 அதிகரித்தது. இதனால் சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,06,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 25 அதிகரித்து ரூ.13,255-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் நேற்று எந்தவித மாற்றமும் இல்லை. இன்றும் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 31.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,040 (இன்று) 27.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,960 23-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,08,000 18-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,080இன்றைய தங்கம், வெள்ளி விலை
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:
30.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,840
29.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,240
28.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,720
26-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,06,400
25-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,06,400
24-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,840
22-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,07,440
21-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
19-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,080
17-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,04,800
16-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,200
15-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,440.