Gold Price Today: மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஷாக்.. சென்னையில் ஒரு சவரன் ரேட் என்ன?

  • சென்னை: தங்கம் விலை (Gold Price Today) கடந்த இரு நாட்களாக தாறுமாறாக சரிந்து வந்தது. இந்த நிலையில், மாதத்தின் முதல் நாளே இன்று திடீரென தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்குள் மட்டும் சென்னையில் சவரனுக்கு ரூ.5,280 குறைந்து இருந்த தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கி இருப்பது நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    Advertisement

    தங்கம் விலை கடந்த ஒரு வாரமாகவே சரிந்து வந்தது. கடந்த மாதம் 1 ஆம் தேதி, ரூ.1,05,760 ஆக இருந்தது. இதுவரை தொடர்ந்து சரிந்த தங்கம் விலை கடந்த மாதம் 5 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் உயரத் தொடங்கியது. தினம் தினம் உயர்ந்ததால் நகை பிரியர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். 20 நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு ரூ.15 ஆயிரம் வரை அதிகரித்து.

    Advertisement

    இன்றைய தங்கம் விலை

    இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மீண்டும் தங்கம் விலை சரியத் தொடங்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,360 குறைந்து ரூ.1.16.040-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.295 குறைந்து ரூ.14,505-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றும் சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.1,14,960-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.14,370-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் இன்று திடீரென தங்கம் விலை உயரத் தொடங்கியுள்ளது. இன்று சென்னையில் சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,15,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.15 உயர்ந்து ரூ.14,385-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை உயர்ந்த நிலையில் வெள்ளி விலை சரிந்துள்ளது. வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.255-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Advertisement

    கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

    1.09.2026 - ஒரு சவரன் ரூ.1,15,080 (இன்று)
    31.08.2026 - ஒரு சவரன் ரூ.1,14,960 (நேற்று)
    30.08.2026 - ஒரு சவரன் ரூ.1.16,040
    29.08.2026 - ஒரு சவரன் ரூ.1.16,040

    28.08.2026 - ஒரு சாரன் ரூ.1,18,400 (மாலை)
    28.08.2026 - ஒரு சாரன் ரூ.1,17,200 (காலை)
    26.08.2026 - ஒரு சவரன் ரூ. 1,19,520
    25.08.2026 - ஒரு சவரன் ரூ. 1,17,800
    24.08.2026 - ஒரு சவரன் ரூ.1,20,240

    23.08.2026 - ஒரு சவரன் ரூ.1,19,600
    22.08.2026 - ஒரு சவரன் ரூ.1,19,600
    21.08.2026 - ஒரு சவரன் ரூ.1,18,800
    20.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,16,800

    Advertisement

    17.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,14,160
    16.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
    15.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
    14.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600

    13.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
    12.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600
    11.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,200
    10.08.2026 - ஒரு சவரன்- ரூ.111,600

    9.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
    8.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
    7.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
    6.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
    5.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,07,840

    4.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,600
    3.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,000
    2.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
    1.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760.

    English Summary

    Gold Price Today: Gold prices had been plummeting erratically over the past two days. However, today—the first day of the month—the price has suddenly risen again. Jewelry enthusiasts are shocked by this renewed upward trend, especially considering that the price of gold in Chennai had dropped by ₹5,280 per sovereign in just the last week.