Gold Price Today: ஒரே அடியாக உயர்ந்த தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி.. மீண்டும் ஜெட் வேகம் எடுக்கும் ரேட்!

  • சென்னை: கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை நேற்று திடீரென உயர்ந்து அதிர்ச்சி தந்தது. அதுவும் காலை மாலை என இரண்டு வேளையும் தங்கம் விலை அதிகரித்து அதிர்ச்சி தந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. இதனால் நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அதே நேரத்தில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    Advertisement

    ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை கணிசமாக குறைந்து வந்தது. தினம் தினம் குறைந்து வந்த தங்கம் விலையால் நகை பிரியர்கள் உற்சாகம் அடைந்து வந்தனர். அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வது, அமெரிக்க வங்கி வட்டி விகித எதிர்பார்ப்பு ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. மேலும் கடந்த 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் விலை குறிப்பிடத்தக்க அளவில் சரிந்ததால் வாங்குவோரிடம் உற்சாகம் நிலவியது.

    Advertisement

    இன்றும் உயர்ந்த தங்கம் விலை

    ஆனால் திடீர் அதிர்ச்சியாக நேற்று தங்கம் விலை உயரத் தொடங்கியது. ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் விலை உயர்ந்தது. காலை நிலவரப்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.13,220-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,05,760-க்கும் விற்பனையானது. பின்னர் மாலை நேரத்தில் மீண்டும் விலை உயர்ந்தது. சவரனுக்கு மேலும் ரூ.640 அதிகரித்ததால் ஒரு சவரன் ரூ.1,06,400-க்கும், ஒரு கிராம் ரூ.13,300-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், இன்று (ஜூன் 27) தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கம் சென்னையில் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,370-க்கும், சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.1,06,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    Advertisement

    கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

    27.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,06,960 (இன்று)
    26.06.2026 - ஒரு சவரன்ரூ.1,06,400 (நேற்று மாலை)
    26.06.2026 - ஒரு சவரன்ரூ.1,05,760 (நேற்று காலை)
    25.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,05,120
    24.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,06,800

    23.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,480
    22.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,800
    21.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,800
    20.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,800
    19.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,560

    18.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,11,600 (மாலை)
    18.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,480 (காலை)
    17.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,240
    16.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,480
    15.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,560

    Advertisement

    13.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,880
    12.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,400
    11.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,000
    10.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,400
    09.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600
    08.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,560

    07.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600
    06.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600
    05.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,15,440
    04.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,15,840
    03.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,000

    02.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,000
    01-06-2026 - ஒரு சவரன் ரூ.1,16,000
    31-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,040
    30-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,040
    29-05-2026 - ஒரு சவரன் ரூ.1,16,800

    Advertisement

    28-05-2026 - ஒரு சவரன் ரூ.1,16,000
    27-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,200
    26-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
    25-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,240
    24-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840

    23-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
    22-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,240
    21-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,480
    20-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
    19-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,960

    18-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
    17-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
    16-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
    15-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,120
    14-05-2026 - ஒரு சவரன் ரூ.1,20,400

    Advertisement

    13-05-2026 ஒரு சவரன் ரூ.1,23,200
    12-05-2026 ஒரு சவரன் ரூ. 1,14,640
    11-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800
    10-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
    09-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200

    08-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
    07-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
    06-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800
    05-05-2026- ஒரு சவரன் ரூ.1,10,560
    04-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,000

    English Summary

    Gold Price Today: Gold prices continued their upward trend on June 27 after multiple hikes a day earlier. The price of 22-carat gold increased by ₹70 per gram, while silver rates remained unchanged, bringing fresh disappointment to jewellery buyers across the state.