Gold Price Today: இன்றும் உயர்ந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி! சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

  • சென்னை: தங்கம் விலை (Gold Price Today) வாரத்தின் முதல் நாளான நேற்று உயர்ந்து நகை பிரியர்களுக்கு ஷாக் கொடுத்தது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் சென்னையில் ரூ.1,14,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் இன்றாவது விலை குறையுமா என எதிர்பார்த்த நகை பிரியர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

    Advertisement

    தினம் தினம் உச்சம் தொட்டு புது வரலாற்று உச்சத்தை அடைந்த தங்கம் விலை நடப்பு ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதியில் இருந்து சரிய தொடங்கியது. ஒரு சவரன் ரூ.1.34 லட்சம் வரை சென்ற நிலையில் அதற்கு பிறகு சுமார் 5 மாதங்களில் 30 ஆயிரம் வரை குறைந்தது. இதனால் நகை பிரியர்கள் சற்று ஆறுதல் அடைந்து இருந்தனர்.

    Advertisement

    தங்கம் விலை உயர்ந்தது

    கடந்த 5 மாதங்களில் ஒரு சவரன் ரேட் 1.20 லட்சத்தை தாண்டாமலே இருந்து வந்தது. ஈரான் அமெரிக்கா போர் காரணமாக தங்கம் விலை குறைந்து வந்தது. பின்னர் தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தாலும் பெரிய அளவு உச்சம் தொடாமல் இருந்து வந்தது. ஆனால் நடப்பு மாதம் 5 ஆம் தேதிக்கு பிறகு மின்னல் வேகத்தில் உயரத் மீண்டும் தங்கம் விலை தொடங்கியது. நேற்றும் வாரத்தின் முதல் நாளே தங்கம் விலை உயர்ந்துள்ளது நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.400 அதிகரித்து ரூ.1,14,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.50 அதிகரித்து ரூ.14,270-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் வெள்ளி விலை நேற்று எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.255-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இன்றைய ரேட் என்ன?

    இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 1,14,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 அதிகரித்து ரூ.14,290-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்றும் எந்த வித மாற்றமும் இல்லை. நேற்றைய விலைப்படியே ஒரு கிராம் ரூ.255-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Advertisement

    கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:

    18.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,14,320 (இன்று)
    17.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,14,160
    16.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
    15.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
    14.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600

    13.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
    12.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600
    11.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,200
    10.08.2026 - ஒரு சவரன்- ரூ.111,600

    9.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
    8.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
    7.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
    6.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
    5.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,07,840

    Advertisement

    4.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,600
    3.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,000
    2.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
    1.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760.

    English Summary

    Gold Price Today: Gold prices rose yesterday—the first day of the week—shocking jewelry enthusiasts. In a single day, the price increased by ₹400 per sovereign, with the rate in Chennai reaching ₹1,14,160. Consequently, jewelry enthusiasts are eagerly watching to see how gold prices will fare today.