சென்னை: தங்கம் விலை (Gold Price Today) இன்று சரமாரியாக உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் சுமார் ரூ.8 ஆயிரம் அளவில் சரிந்து இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,320 அதிகரித்து நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. தங்கம் விலையை போன்று வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது.
தங்கம் விலை கடந்த மாதம் 1 ஆம் தேதி, ரூ.1,05,760 ஆக இருந்தது. நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பிறகு தொடர்ந்து சரிந்த தங்கம் விலை கடந்த மாதம் 5 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் உயரத் தொடங்கியது. தினம் தினம் உயர்ந்ததால் நகை பிரியர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். கடந்த மாதத்தில் 20 நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு ரூ.15 ஆயிரம் வரை அதிகரித்தது.
ஆனால் மீண்டும் தங்கம் விலை சரியத் தொடங்கியது. கடந்த ஒரு வாரமாக மீண்டும் தங்கம் விலை சரிந்து வந்தது. ரூ.1.20 லட்சம் வரை சென்ற நிலையில் மீண்டும் தங்கம் விலை குறைந்து நேற்று ரூ.1,11,600 -க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை மீண்டும் சரிய தொடங்கியது நகை பிரியர்கள் இடையே குஷியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் மீண்டும் தங்கம் விலை இன்று உயரத் தொடங்கியுள்ளது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2,320 அதிகரித்து பெரிய ஷாக் கொடுத்துள்ளது. இதனால் சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,13,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.290 உயர்ந்து 14,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் குறைந்து வந்தது. இன்று தங்கம் விலை உயர்ந்தது போல வெள்ளியும் உயர்ந்துள்ளது. சென்னையில் வெள்ளி விலை இன்று கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.255-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 3.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,920 (இன்று) 28.08.2026 - ஒரு சாரன் ரூ.1,18,400 (மாலை) 23.08.2026 - ஒரு சவரன் ரூ.1,19,600 17.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,14,160 13.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760 9.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720 4.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,600இன்றைய தங்கம் விலை
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்
2.09.2026 - ஒரு சவரன் ரூ. 1,11,600 (நேற்று)
1.09.2026 - ஒரு சவரன் ரூ.1,15,080
31.08.2026 - ஒரு சவரன் ரூ.1,14,960
30.08.2026 - ஒரு சவரன் ரூ.1.16,040
29.08.2026 - ஒரு சவரன் ரூ.1.16,040
28.08.2026 - ஒரு சாரன் ரூ.1,17,200 (காலை)
26.08.2026 - ஒரு சவரன் ரூ. 1,19,520
25.08.2026 - ஒரு சவரன் ரூ. 1,17,800
24.08.2026 - ஒரு சவரன் ரூ.1,20,240
22.08.2026 - ஒரு சவரன் ரூ.1,19,600
21.08.2026 - ஒரு சவரன் ரூ.1,18,800
20.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,16,800
16.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
15.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
14.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600
12.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600
11.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,200
10.08.2026 - ஒரு சவரன்- ரூ.111,600
8.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
7.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
6.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
5.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,07,840
3.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,000
2.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
1.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760.