சென்னை: தங்கம் விலை (Gold Price Today) தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தடாலடியாக அதிர்ச்சி கொடுத்து அதிகரித்தது. வாரத்தின் தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை உயருமோ என நகை பிரியர்கள் அச்சமடைந்து இருந்தனர். இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 அதிகரித்துள்ளது.
தங்கம் விலை கடந்த ஆண்டு தொடக்கத்தில் உயரத் தொடங்கியது. ஒரு சவரன் 57 ஆயிரம் என்று இருந்த நிலையில் ஒரே ஆண்டுக்குள் ஒரு லட்சத்தை தாண்டி விற்பனை ஆனது. அதன்பிறகு பிப்ரவரி மாதத்திற்குள் தங்கம் விலை ரூ.1.25 லட்சத்தை தாண்டியது. ராக்கெட் வேகத்தில் சென்ற தங்கம் விலையால் நகை பிரியர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
அதன் பிறகு சற்று தங்கம் விலையானது குறைய தொடங்கியது. இதனால் கடந்த மே மாத தொடக்கத்தில் சவரன் ரூ.1.12 லட்சத்துக்கு விற்பனை ஆனது. இதனால் மேலும் குறையும் என நினைத்த போது மீண்டும் உயரத் தொடங்கியது. தொடர்ந்து கடந்த ஒரு மாதமாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த புதன்கிழமை கூட ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.3,200 குறைந்து ரூ.1,10,400- க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.400 குறைந்து ரூ.13,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் வியாழக்கிழமை மேலும் குறைந்தது. சவரனுக்கு ரூ.2,400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,000-க்கும், கிராமுக்கு ரூ.300 குறைந்து ஒரு கிராம் ரூ.13,500-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து தங்கம் விலை சரிந்து வந்த நிலையில் திடீரென தங்கம் விலை உயரத் தொடங்கியது. வெள்ளிக்கிழமை அப்படியே தடலாடியாக தங்கம் விலை உயர்ந்தது. பின்னர் சனிக்கிழமையும் தங்கம் விலை உயர்ந்து நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வெள்ளிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,10,400- க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.13,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் சனிக்கிழமை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.1,10,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.60 உயர்ந்து ரூ.13,860-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று விடுமுறை என்பதால் தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது. இன்று வாரத்தின் முதல் நாளே தங்கம் விலை அதிர்ச்சி கொடுத்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,12,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் இன்று சென்னையில் ரூ.210 உயர்ந்து ரூ.14,070-க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறைந்து வந்த தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கி இருப்பது நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலையை போன்று இன்று வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது. இதனால் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.270-இல் இருந்து, ரூ.280 ஆக அதிகரித்துள்ளது. மீண்டும் தங்கம், வெள்ளி விலை உயர்ந்துள்ளது நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 15.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,560 11.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,000 06.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600 02.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,000 28-05-2026 - ஒரு சவரன் ரூ.1,16,000 23-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840 18-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000 13-05-2026 ஒரு சவரன் ரூ.1,23,200 08-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200ஏறி, இறங்கும் தங்கம் விலை
இன்றும் அதிரடியாக உயர்ந்தது
வெள்ளி விலை என்ன?
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:
14.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,880
13.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,880
12.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,400
10.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,400
09.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600
08.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,560
07.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600
05.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,15,440
04.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,15,840
03.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,000
01-06-2026 - ஒரு சவரன் ரூ.1,16,000
31-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,040
30-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,040
29-05-2026 - ஒரு சவரன் ரூ.1,16,800
27-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,200
26-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
25-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,240
24-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
22-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,240
21-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,480
20-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
19-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,960
17-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
16-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
15-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,120
14-05-2026 - ஒரு சவரன் ரூ.1,20,400
12-05-2026 ஒரு சவரன் ரூ. 1,14,640
11-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800
10-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
09-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
07-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
06-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800
05-05-2026- ஒரு சவரன் ரூ.1,10,560
04-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,000