Gold Price Today: அவ்ளோதான், இனி குறையாது போல.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி

  • சென்னை: தங்கம் விலை (Gold Price Today) கடந்த ஒரு மாதமாக தாறுமாறாக சரிந்து வந்த நிலையில் நேற்று திடீரென உயர்ந்தது. சவரன் ஒரு லட்சத்திற்கு கீழ் குறையும் என எதிர்பார்த்த நகை பிரியர்களுக்கு, இனி அவ்வளவு தான் குறையாதுங்க என்று சொல்கிற அளவுக்கு உயர தொடங்கியுள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.360 அதிகரித்த நிலையில் இன்றும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது.

    Advertisement

    தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைந்து வருகிறது. கடந்த ஜனவரியில் ஒரு சவரன் தங்கம் ரூ.1.34 லட்சம் என்ற வரலாற்றில் இல்லாத அளவுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து குறைந்து வந்தது. குறிப்பாக பிப்ரவரி மாத இறுதியில் இருந்து தங்கம் விலை சரிய தொடங்கியது.

    Advertisement

    திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை

    இடையிடையே அதிகரித்தாலும் புது உச்சம் தொடாமல் இருந்து வந்தது. அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,05,760-க்கு விற்பனை ஆனது. அடுத்த மாதம் சற்றும் உயர்ந்தது. அதாவது கடந்த செப்டம்பர் மாதம் ஒரு சவரன் ரூ.1,15,080-க்கு விற்பனை ஆனது. இதன்பிறகு மீண்டும் குறைந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.1,09,320 -க்கு விற்பனை ஆனது.

    இது மேலும் குறைந்த நேற்று முன் தினம் அதாவது நவம்பர் 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.1,01,840 -க்கு விற்பனை ஆனது. இதனால் தங்கம் விலை கண்டிப்பாக ஒரு சவரன் ரூ.1 லட்சத்திற்கு கீழ் சென்றுவிடும் என நகை பிரியர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் நேற்றைய விலை நகை பிரியர்களுக்கு திடீர் ஷாக்கை கொடுத்தது. நேற்று ஒரு சவரன் ரூ.360 உயர்ந்தது.

    Advertisement

    இன்றைய தங்கம் விலை என்ன?

    சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,02,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.45 உயர்ந்து ரூ.12,775-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் நகை பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை உயர்ந்துள்ளது.

    Gold Price Today: படுத்தேவிட்ட தங்கம் விலை.. சவரன் 1 லட்சத்துக்கு கீழ் சரிகிறதா? வாரத்தின் முதல் நாளே ஷாக்

    சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.1,02,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.25 உயர்ந்து ரூ.12,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மற்றும் இன்று என 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது. தங்கம் விலை மீண்டும் ரூ 1 லட்சத்திற்கு கீழ் செல்லும் என எதிர்பார்த்த நகை பிரியர்களுக்கு இது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    Advertisement

    வெள்ளி விலை என்ன?

    தங்கம் விலையை போன்றே வெள்ளி விலையும் அதிரடியாக சரிந்தது. உச்ச பட்சமாக கடந்த ஜனவரி மாதம் ஒரு கிராம் ரூ.425-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றும் வெள்ளி விலை எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றும் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

    3-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,02,400 (இன்று)
    2-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,02,200 (நேற்று)
    1-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,01,840
    31-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,01,840
    30-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,320
    29-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,560
    28-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,560

    Advertisement

    27-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,080
    26-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,680
    25-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,560
    24-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,560
    23-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,480

    Gold Price Today: அதல பாதாளத்தில் தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.2,480 சரிந்தது.. வெள்ளி விலையும் கடும் வீழ்ச்சி

    22-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,880
    21-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,07,120
    20-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,07,920
    19-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,560

    Advertisement

    18-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,280
    17-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,280
    16-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,120
    15-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,120
    14-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,720

    12-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,760
    12-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,10,720
    11-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,11,040
    10-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,11,040
    08-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,860
    07-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,860

    06-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,280
    05-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,400
    04-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,400
    03-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,400

    02-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,10,200
    01-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,320
    30-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,680
    29-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,120

    Gold Rate Today: மீண்டும் அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை.. 3 நாட்களில் ரூபாய் 1,000 உயர்வு!

    28-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,320 (மாலை)
    28-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,10,120 (காலை)
    27-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,000
    26-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,000

    25-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,080
    24-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,000
    23-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,13,080
    21-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,13,480

    20-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.114,280
    19-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.114,280
    18-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.113,240
    17-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.112,080

    1.09.2026 - ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,15,080
    1.08.2026 - ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,760.

    English Summary

    Gold Price Today: After experiencing a sharp and erratic decline over the past month, the price of gold saw a sudden increase yesterday. For jewelry enthusiasts who were hoping the price per sovereign would drop below one lakh rupees, the recent upturn suggests that such a decline is unlikely to happen. Following a rise of Rs. 360 per sovereign yesterday, the price has increased by another Rs. 200 per sovereign today.