சென்னை: தங்கம் விலை மீண்டும் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது. கடந்த வாரம் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் இந்த வாரம் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.13,500-க்கும், ஒரு சவரன் ரூ.1,08,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் ரூ.245-க்கு விற்பனையாகி வருகிறது.
தங்கம் விலை கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு சரிய தொடங்கியது. எப்போது ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதோ அப்போதில் இருந்து தங்கம் விலை அதிரடியாக சரிந்தது. அது வரை தினம் தினம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்து அதிர்ச்சி அளித்தது தங்கம் விலை. தினமும் ஒரு புதிய உச்சம் என தங்கம் விலை இருந்து வந்தது.
ஆனால் பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரான் அமெரிக்கா போர் தொடங்கியதும் சரிய தொடங்கிய தங்கம் இதுவரை புதிய உச்சம் தொடாமல் இருந்தது. அதாவது ஜனவரி மாதம் கடைசியில் ஒரு சவரன் ரூ.1.34 லட்சம் என்ற வரலாற்றில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்ட தங்கம் விலை அதற்கு பிறகு 1.20 லட்சத்தை தாண்டாமலே இருந்து வருகிறது. ஈரான் அமெரிக்கா போர் அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியபோது சற்று உயர்ந்தது. பின்னர் பேச்சுவார்த்தை முறிந்ததும் மீண்டும் விலை குறைய தொடங்கியது. இப்படியாக தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தாலும் பெரிய அளவு உச்சம் தொடாமல் இருந்து வந்தது. கடந்த வாரம் இறங்குமுகமாக இருந்த தங்கம் விலை இந்த வாரம் அதற்கு நேர்மாறாக தினமும் உயர்ந்து வருகிறது. நேற்று முன் தினம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ரூ.1,05,760க்கு விற்பனையானது. ஆனால் நேற்று ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.1680 உயர்ந்து, ரூ. 1,07,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.210 உயர்ந்து, ரூ.13,430-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் இன்றாவது விலை சரியுமா என எதிர்பார்த்த நகை பிரியர்களுக்கு மீண்டும் ஷாக் கொடுத்தது தங்கம் விலை. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது. இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.13,500-க்கும், ஒரு சவரன் ரூ.1,08,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை நேற்று கிராம் 5 ரூபாய் உயர்ந்து, ரூ.245க்கு விற்பனை செய்யப்பட்டது. 23-07-2026- ஒரு சவரன்- ரூ.1,08,000 18-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,080தங்கம் விலை
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
ஆனால் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் ரூ.245-க்கு விற்பனையாகி வருகிறது.தங்கம் விலை - கடந்த சில நாட்களில்..
22-07-2026- ஒரு சவரன்- ரூ.1,07,440
21-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,760
19-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,080
17-07-2026- ஒரு சவரன்- ரூ.1,04,800
16-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,200
15-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,440