சென்னை: தங்கம் விலை (Gold Price Today) இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.760 உயர்ந்து ரூ.1,06,040-க்கும், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.95 உயர்ந்து ரூ.13,255-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை ரூ.3,840 அதிகரித்துள்ளது நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. வெள்ளி விலை எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.205-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாத இறுதியில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை நெருங்கி இருந்த நிலையில் விரைவில் ஒரு லட்சத்திற்கு கீழ் குறையக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் மீண்டும் விலை உயர்ந்து தங்கம் விலை தற்போது ஒரு சவரன் ரூ.1.06 லட்சத்தை நெருங்கிவிட்டது நகை பிரியர்களுக்கு ஏமாற்றத்தினை கொடுத்துள்ளது.
தங்கம் விலை கடந்த மாதம் 31-10-2026 அன்று ஒரு சவரன் ரூ.1,01,840-க்கு விற்பனை ஆனது. இதனால் அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை மேலும் சரிந்து சவரன் ரூ.1 லட்சத்திற்கு கீழ் குறையும் எனவும், சில தங்கம் விலை நிபுணர்கள் ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்திற்கு கீழ் குறையவும் வாய்ப்பு உள்ளதாக கூறினர். ஆனால் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது. சிறிது சிறிதாக உயர்ந்த தங்கம் விலை அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் டிரம்பின் குடியரசுக் கட்சி கடும் பின்னடைவை சந்தித்தது. செனட் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சபையை டிரம்ப் கட்சி இழந்தது. இதனால் தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயரத் தொடங்கியது. டாலரின் மதிப்பு குறைந்ததால் இது தங்கம் விலையில் எதிரொலித்தது. இதனால் சென்னையில் கடந்த 5 ஆம் தேதி ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,07,080-க்கு விற்பனை ஆனது. அதன்பிறகும் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்தாலும் இடையில் சற்று குறைந்தது. இந்நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயந்துள்ளது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,06,040-க்கும், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.95 உயர்ந்து ரூ.13,255-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை ரூ.3,840 அதிகரித்துள்ளது நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தங்கம் விலை கூடிக்கொண்டிருக்கும் அதே சமயம் வெள்ளி விலை எந்த வித மாற்றமும் இன்றி விற்பனை ஆகி வந்தது. அந்த வகையில் இன்றும் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.205-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 9-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,06,040 (இன்று) 4-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,800 (மதியம்) 31-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,01,840 27-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,080 22-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,880 18-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,280 12-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,760 06-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,280 02-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,10,200தங்கம் விலை மீண்டும் உயர்வு
இன்றைய தங்கம் விலை என்ன?
Gold Price Today: இனிமே குறையவே குறையாது போல! ஒரே நாளில் உச்சம் தொட்ட தங்கம் விலை.. 4 நாட்களில் 5 ஆயிரம் எகிறியது
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்
8-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,280
7-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,280
6-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,120
5-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,07,080
4-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,02,600 (காலை)
3-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,02,400
2-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,02,200
1-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,01,840
30-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,320
29-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,560
28-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,560
26-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,680
25-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,560
24-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,560
23-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,480Gold Price Today: அவ்ளோதான், இனி குறையாது போல.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி
21-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,07,120
20-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,07,920
19-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,560
17-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,280
16-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,120
15-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,120
14-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,720
12-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,10,720
11-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,11,040
10-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,11,040
08-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,860
07-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,860
05-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,400
04-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,400
03-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,400
01-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,320
30-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,680
29-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,120