சென்னை: தங்கம் விலை நாளுக்கு நாள் போக்கு காட்டி வருகிறது. நேற்று ஒரே நாளில் சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 240 அதிகரித்திருந்தது. இருப்பினும், ஆடிப்பெருக்கு நாளில் தங்கம், வெள்ளி வாங்குவது நல்லது என்பதால் ஏராளமானோர் நகைக் கடைகளில் குவிந்திருந்தனர். இந்நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 சரிந்துள்ளதால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிலோ ரூ. 2,35,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்தும், சரிந்தும் வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரியில் ஒரு சவரன் தங்கம் ரூ.57 ஆயிரம் என்று இருந்த நிலையில் ஒன்றரை ஆண்டுக்குள் ஒரு சவரன் தங்கம் ரூ.1.20 ஆயிரம் என்ற விலையை தாண்டியது. கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு தங்கம் விலை சிறிது சிறிதாக குறைய தொடங்கியது. ஈரான் - அமெரிக்கா போர் ஆரம்பித்ததில் இருந்து தங்கம் விலை சரியத் தொடங்கியது.
மார்ச் 1 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் ரேட் ரூ.1,26,200 -க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகும் தங்கம் விலை இறங்குமுகமாகவே இருந்தது. தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலையால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,05,760-க்கு விற்பனை ஆனது. நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் தங்கம் விலை மாற்றமில்லை. வாரத்தின் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை குறையுமா என்று எதிர்பார்த்த நிலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்து அதிர்ச்சி கொடுத்திருந்தது. அதன்படி, நேற்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.240 அதிகரித்து ரூ.1,06,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.30 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,250-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கடந்த சில நாட்களாகவே எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது. சென்னையில் வெள்ளி விலை எந்தவித மாற்றமின்றி தொடர்கிறது. அதன்படி ஒரு கிராம் ரூ.235-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 400 குறைந்து, ரூ. 1,05,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 50 குறைந்து ரூ. 13,200க்கு விற்பனை செய்யப்படுகிறதுது. வெள்ளி விலை கடந்த சில நாட்களாகவே எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்து வரும் நிலையில், இன்றும் எந்தவித மாற்றமின்றி தொடர்கிறது. அதன்படி, ஒரு கிராம் ரூ.235-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 4.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,600 (இன்று) 31.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,040 27.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,960 23-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,08,000 18-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,080இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:
3.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,000 (நேற்று)
2.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
1.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
30.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,840
29.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,240
28.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,720
26-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,06,400
25-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,06,400
24-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,840
22-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,07,440
21-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
19-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,080
17-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,04,800
16-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,200
15-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,440.