சென்னை: மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களின் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவை சந்தித்துள்ளன. குறிப்பாக கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்த நிலையில் இருந்த தங்கத்தின் விலை, தற்போது சற்று குறைந்திருப்பது நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஓரளவு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்புகளை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், போர் சூழல் தொடர்பான அச்சங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக தங்கம் - வெள்ளி விலை நிலவரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தலைநகர் டெல்லியில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.1,54,420 ஆக பதிவாகியுள்ளது. இது முந்தைய நாளை ஒப்பிடுகையில் ரூ.130 குறைவாகும். அதேபோல் 22 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.1,41,552 என்ற அளவில் விற்பனையாகிறது. தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஹைதராபாத்திலும் தங்கத்தின் விலை சரிவை சந்தித்துள்ளது. அங்கு 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.1,54,830 ஆகவும், 22 காரட் தங்கம் ரூ.1,41,928 ஆகவும் உள்ளது. இரண்டிலும் ரூ.130 வரை குறைவு பதிவாகியுள்ளது. பெங்களூருவிலும் இதேபோன்ற நிலை காணப்படுகிறது. அங்கு 24 காரட் தங்கம் ரூ.1,54,710 ஆகவும், 22 காரட் தங்கம் ரூ.1,41,818 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. முதலீட்டாளர்கள் மற்றும் நகை வாங்குவோர் சந்தை நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். நாட்டின் நிதித் தலைநகரமான மும்பையிலும் தங்கத்தின் விலை சரிந்துள்ளது. 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.1,54,590 ஆக விற்பனையாகிறது. இது ரூ.130 குறைவாகும். 22 காரட் தங்கத்தின் விலை ரூ.1,41,708 ஆக உள்ளது. கேரள மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்தில் 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.1,55,060 ஆக உள்ளது. 22 காரட் தங்கம் ரூ.1,42,138 ஆக விற்பனையாகிறது. இங்கும் ரூ.130 அளவுக்கு விலை சரிவு பதிவாகியுள்ளது. தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும் தங்க விலை குறைந்துள்ளது. 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.1,55,040 ஆகவும், 22 காரட் தங்கம் ரூ.1,42,120 ஆகவும் விற்பனையாகிறது. முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது இரு வகை தங்கங்களின் விலையிலும் ரூ.130 அளவுக்கு குறைவு ஏற்பட்டுள்ளது. தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் சரிவை சந்தித்துள்ளது. சரக்கு வர்த்தக சந்தையில் வெள்ளி எதிர்கால வர்த்தக விலை ரூ.1,560 குறைந்து ஒரு கிலோவுக்கு ரூ.2,45,870 ஆக பதிவாகியுள்ளது. அண்மைக் காலமாக வெள்ளி விலை வேகமாக உயர்ந்து வந்த நிலையில், இந்த சரிவு முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.தங்கம் விலை
தங்கம் விலை குறை
இதேபோல், கொல்கத்தாவிலும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அங்கு 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.1,54,390 ஆகவும், 22 காரட் தங்கம் ரூ.1,41,524 ஆகவும் விற்பனையாகிறது. இந்த நகரத்தில் 24 காரட் தங்க விலை ரூ.120 வரை குறைந்துள்ளது.சென்னை தங்கம் விலை
போர் பதற்றம்
சர்வதேச அரசியல் பதற்றங்கள், அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றம், மத்திய வங்கிகளின் வட்டி விகித கொள்கைகள் உள்ளிட்ட காரணிகள் அடுத்த சில நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.