சென்னை: தங்கம் விலை நாளுக்கு நாள் போக்கு காட்டி வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூபாய் 400 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் இன்று ஒரு சவரன் ரூ.1,15,440க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம், ரூ.14,430க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை ஒரு லட்சத்தைக் கடந்து பல மாதங்களாகிறது. இதனால், மிடில் கிளாஸ் மக்களுக்கு தங்கம் என்பது எட்டாக் கனியாக மாறியுள்ளது. இருப்பினும் தங்கத்தின் மீதான ஆர்வம் பொதுமக்களிடம் குறையவில்லை. தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. ஒரு சில நாள்கள் உயர்ந்தும், ஒரு சில நாள்கள் தொடர்ந்து குறைந்தும் வருகிறது.
கடந்த சில மாதங்களாக, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சங்களை எட்டியது. புவிசார் அரசியல் பதட்டங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் பணவீக்க அச்சங்கள் காரணமாக தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதிய முதலீட்டாளர்கள், பெருமளவில் கொள்முதல் செய்தனர். இருப்பினும், தற்போது நிலைமை மாறி வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இன்று தங்கம் விலை குறையுமா அல்லது அதிகரிக்குமா என்கிற எதிர்பார்ப்பு நகை பிரியர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூபாய் 400 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் இன்று ஒரு சவரன் ரூ.1,15,440க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம், ரூ.14,430க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கடந்த இரண்டு நாட்களாக அதிரடியாக குறைந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.280-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ. 2,80,000-க்கு விற்பனையாகிறது. 05.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,15,440 (இன்று) 04.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,15,840 (நேற்று) 03.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,000 02.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,000 01-06-2026 - ஒரு சவரன் ரூ.1,16,000 31-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,040 30-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,040 29-05-2026 - ஒரு சவரன் ரூ.1,16,800 28-05-2026 - ஒரு சவரன் ரூ.1,16,000 27-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,200 26-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840 25-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,240 24-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840 23-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840 22-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,240 21-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,480 20-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000 19-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,960 18-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000 17-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000 16-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000 15-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,120 14-05-2026 - ஒரு சவரன் ரூ.1,20,400 13-05-2026 ஒரு சவரன் ரூ.1,23,200 12-05-2026 ஒரு சவரன் ரூ. 1,14,640 11-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800 10-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200 09-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200 08-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200 07-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200 06-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800 05-05-2026- ஒரு சவரன் ரூ.1,10,560 04-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,000தங்கம் விலை - இன்றைய நிலவரம்
தங்கம் விலை கடந்த சில நாட்களில்