Gold Rate today: 3 நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. சென்னையில் இன்றைய ரேட் என்ன?

  • சென்னை: தங்கம் விலை அதிரடியாக சரிந்து வந்தது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்த நிலையில் இன்று மேலும் குறையுமா என்ற எதிர்பார்ப்பு நகை பிரியர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது.

    Advertisement

    கடந்த 12 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 1.14 லட்சத்துக்கு விற்பனை ஆன நிலையில் திடீரென ஷாக் கொடுக்கும் விதமாக ஒரே நாளில் ரூ.9 ஆயிரம் அதிகரித்து ரூ. 1.23 லட்சத்திற்கு விற்பனையாகி நகை பிரியர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. அதுவரை லேசான ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை அன்று ஒரே நாளில் உச்சம் தொட்டது.

    Advertisement

    தங்கம் விலை தொடர் சரிவு

    ஆனால் அதன் பிறகு அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை குறைந்து வந்தது. அதன்படி செவ்வாய்க்கிழமை தங்கம் விலை சவரனுக்கு 400 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.14,730-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    புதன்கிழமை ஒரே நாளில் ஆபரணத் தங்கம் ரூ. 640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.80 குறைந்து ரூ.14,650-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றும் 3வது நாளாக தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,200 குறைந்து ரூ.1,16,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.150 குறைந்து ரூ.14,500-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    Advertisement

    இந்நிலையில், சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது. தங்கம் விலை இன்று சவரன் ரூ.1,16,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.14,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    பொருளாதார நிபுணர்கள் சொல்லும் காரணம்

    சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள், டாலரின் மதிப்பு ஏற்ற இறக்கம் மற்றும் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீடுகளைப் பங்குகள் பக்கம் திருப்புவது போன்ற உலகளாவிய காரணங்களால்தான் தங்கம் விலை வீழ்ச்சி ஏற்பட்டதாகப் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

    கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து, இந்த மாதத்தின் தொடக்கத்தில் 22 கேரட் தங்கம் சவரன் ₹1,20,000-ஐதாண்டி புதிய உச்சத்தைத் தொட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது சவரன் ₹1,16,800 என்ற நிலைக்கு வந்திருப்பது, வரும் நாட்களில் திருமணம் மற்றும் சுபகாரியங்களுக்கு நகை எடுக்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு.

    Advertisement

    இருப்பினும், சர்வதேச சந்தையின் சூழலைப் பொறுத்து விலை மீண்டும் மாற வாய்ப்புள்ளதால், இந்த விலை வீழ்ச்சியைப் பொதுமக்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

    தங்கம் விலை கடந்த சில நாட்களில்

    29-05-2026 - ஒரு சவரன் ரூ.1,16,800
    28-05-2026 - ஒரு சவரன் ரூ.1,16,000
    27-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,200
    26-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
    25-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,240

    24-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
    23-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
    22-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,240
    21-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,480

    20-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
    19-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,960
    18-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
    17-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
    16-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000

    Advertisement

    15-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,120
    14-05-2026 - ஒரு சவரன் ரூ.1,20,400
    13-05-2026 ஒரு சவரன் ரூ.1,23,200
    12-05-2026 ஒரு சவரன் ரூ. 1,14,640

    11-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800
    10-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
    09-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
    08-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200

    07-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
    06-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800
    05-05-2026- ஒரு சவரன் ரூ.1,10,560
    04-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,000

    English Summary

    Gold prices are witnessing a sharp decline. With the price of gold dropping by ₹1,200 per sovereign in a single day yesterday, anticipation has arisen among jewelry enthusiasts as to whether it will fall even further today.