Gold Rate Today: ஆடி வெள்ளியில் நகை பிரியர்களுக்கு ஆறுதல்.. தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை இன்று நோ சேஞ்ச்

  • சென்னை: கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.4,400 அதிகரித்து நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் எகிறுமா அல்லது விலை குறைந்து ஆறுதல் அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. நகைப் பிரியர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், இன்று தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.

    Advertisement

    சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் பொருளாதார சூழலைப் பொறுத்து தங்கம், வெள்ளி விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேற்காசிய போர் உள்ளிட்ட காரணங்களால், யாரும் எதிர்பார்க்காத வகையில், தங்கம் விலை ஒரு லட்சத்தை கடந்து விற்பனையாகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே தங்கம், வெள்ளி விலை ஏற்றம் இறக்கமாகக் காணப்பட்டு வருகிறது.

    Advertisement

    ஆகஸ்ட் 1 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,06,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை சற்று குறைந்து ரூ.1,05,600 என இருந்தது. 5 ஆம் தேதி திடீரென தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்தது. காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் சேர்த்து சென்னையில் ஒரு சவரன் ரூ.2,240 அதிகரித்தது. இதனால் 5 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,07,840 க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமையும் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,160 அதிகரித்தது. இதனால் சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,10,000 ஆக உள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.13,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.4,400 அதிகரித்து நகை பிரியர்களை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    Advertisement

    இந்நிலையில் இன்று தங்கம் விலை அதே ஹை பிட்ச்சில் ஏறுமா அல்லது சரிவைக் காணுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு நகைப் பிரியர்கள் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில், ஆடி வெள்ளியில் ஆறுதல் அளிக்கும் விதமாக இன்று (ஆகஸ்ட் 7) நேற்றைய விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.13,750-க்கும், சவரன் ரூ.1,10,000-க்கும் விற்பனையாகிறது. அதேபோன்று வெள்ளி விலையும் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.

    கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

    7.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000 (இன்று)
    6.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000 (நேற்று)
    5.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,07,840

    Advertisement

    4.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,600
    3.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,000
    2.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
    1.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760

    31.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,040
    30.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,840
    29.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,240
    28.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,720

    27.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,960
    26-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,06,400
    25-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,06,400
    24-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,840

    23-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,08,000
    22-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,07,440
    21-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
    19-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,080

    Advertisement

    18-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,080
    17-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,04,800
    16-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,200
    15-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,440.

    English Summary

    After the price of gold surged by ₹4,400 in just the last two days—shocking jewelry enthusiasts—anticipation is mounting over whether the price will skyrocket again today or drop, offering some relief.