Gold Rate Today: இறங்கிய வேகத்தில் மீண்டும் எகிறிய தங்கம் விலை.. நகை பிரியர்கள் கவலை!

  • சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாக கடுமையாக அதிகரித்து வருகிறது. நேற்று காலையில் உயர்ந்து மாலையில் குறைந்தது. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 12) தங்கம் விலை மேலும் உயர்ந்து நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

    Advertisement

    சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு நிலை, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஆகியவற்றைப் பொறுத்து இந்தியாவில் தங்கம், வெள்ளி விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேற்காசிய போர் உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை ஒரு லட்சத்தை கடந்து விற்பனையாகி வருகிறது.

    Advertisement

    தங்கம் விலை ஏற்ற இறக்கம்

    கடந்த மே மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதையடுத்து தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையில் பெரியளவில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது.

    ஆகஸ்ட் 5 ஆம் தேதி தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்தது. காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் சேர்த்து சென்னையில் ஒரு சவரன் ரூ.2,240 அதிகரித்தது. இதனால் 5 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,07,840 க்கு விற்பனை செய்யப்பட்டது.

    Advertisement

    அடுத்த நாளான 6 ஆம் தேதியும் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,160 அதிகரித்தது. இதனால் சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,10,000 ஆக விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.13,750-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    தொடர்ந்து அதிரடி உயர்வு

    வெள்ளிக்கிழமை காலையில் தங்கம் விலையில் மாற்றமின்றி முந்தைய நாள் விலைக்கே விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தங்க நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அன்று மாலை தங்கம் விலை உயர்ந்தது. சவரனுக்கு ரூ.1,200 அதிகரித்து, ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.150 அதிகரித்து, ரூ.13,900-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    Advertisement

    சனிக்கிழமை சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்தது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூபாய் 1,11,720க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.65 உயர்ந்து ரூபாய் 1,3,965க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் 4 நாட்களில் மட்டுமே தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 6,120 உயர்ந்தது.

    மீண்டும் உயருமா?

    திங்கட்கிழமை, மார்க்கெட் திறக்கப்பட்டதும் கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் குறைந்து 13,950 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 111,600 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று ஆகஸ்ட் 11 ஆம் தேதி காலையில் ரூபாய் 300 அதிகரித்த தங்கம் விலை, மாலையில் குறைந்தது. அந்த வகையில், ஒரு கிராம் 14,150 ரூபாய்க்கும், சவரன் 1,13,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    Advertisement

    இந்த நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் உயர்ந்து 14,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆபரண தங்கம் சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 1,13,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    அதேசமயம் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

    12.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,600
    11.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,200
    10.08.2026 - ஒரு சவரன்- ரூ.111,600

    9.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
    8.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
    7.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
    6.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
    5.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,07,840

    Advertisement

    4.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,600
    3.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,000
    2.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
    1.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760

    31.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,040
    30.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,840
    29.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,240
    28.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,720

    27.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,960
    26-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,06,400
    25-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,06,400
    24-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,840

    23-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,08,000
    22-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,07,440
    21-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
    19-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,080

    18-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,080
    17-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,04,800
    16-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,200
    15-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,440

    English Summary

    Gold prices have been rising sharply over the past few days. Yesterday, the price rose in the morning but dropped by the evening. Against this backdrop, the price of gold has risen further today (August 12), coming as a shock to jewelry enthusiasts.