Gold Rate Today: ரூ.3,040 சரிவு.. ஒரேயடியாக சரியும் தங்கம் விலை.. இதை நிஜமா யாருமே எதிர்பார்க்கல

  • சென்னை: அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் கெவின் வார்ஷ் ஹோல் மாநாட்டில் இன்றைய தினம் பேச உள்ள நிலையில், முதலீட்டாளர்கள் அதை எதிர்நோக்கி காத்திருக்கும் சூழலில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்றைய தினம் சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.600 குறைந்துள்ள நிலையில், கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.3040 வரை தங்கம் விலை குறைந்துள்ளது.

    Advertisement

    இப்போது சர்வதேச சந்தையை பொறுத்தவரை ஸ்பாட் தங்கம் 0.5% குறைந்து அவுன்ஸ் ஒன்றுக்கு 4,576.30 டாலராக இருந்தது. முன்னதாக இந்த வாரம், அமெரிக்க டிரஷரி துறை நீண்டகால பத்திரங்களைத் திரும்ப பெற போவதாக அறிவித்தது. இதனால் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டது.. அமெரிக்க தங்க ப்யூச்சர்ஸின் விலையும் 0.8% சரிந்து 4,629 டாலராக இருந்தது

    Advertisement

    காரணம்

    இதற்கு முக்கிய காரணமே பெடரல் ரிசர்வ் தலைவர் கெவின் வார்ஷ் உரை தான். அவர் இன்று மதியம் ஜாக்சன் ஹோல் மாநாட்டில் உரையாற்ற உள்ளார். அவரது பேச்சில் வட்டி விகிதம் தொடர்பான முக்கிய சிக்னல்கல் கிடைக்கும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    அமெரிக்காவை பொறுத்தவரை அது ஒரு இக்கட்டான சூழலில் இருக்கிறது. அமெரிக்காவில் பணவீக்கம் தொடர்பான கவலைகளை பெடரல் அதிகாரிகள் வெளிப்படுத்தினர். அதேநேரம் அங்கு வளர்ச்சியும் மந்தமாக இருக்கிறது. இந்த நேரத்தில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் என்ன முடிவெடுக்க போகிறது என்பதை முக்கியமாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    அமெரிக்க வட்டி விகிதம்

    பொதுவாக பணவீக்கம் விகிதம் அதிகமாக இருந்தால் அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது வட்டி விகிதத்தை உயர்த்தும். ஆனால், இப்போது வளர்ச்சி மந்தமாக இருப்பதால் வட்டி விகிதத்தை உயர்த்தினால் நிலைமை மோசமாகும். இதன் காரணமாகவே அமெரிக்க பெடரல் ரிசர்வ் எடுக்கும் முடிவு முக்கியத்துவம் பெறுகிறது. தற்போதைய சூழலில் செப்டம்பர் மாதத்தில் அமெரிக்க வட்டி விகிதம் உயர்த்தப்பட 33.9% மட்டுமே வாய்ப்பு இருக்கிறது. மறுபுறம் டிசம்பர் மாதம் வட்டி விகிதம் உயர்த்தப்பட 74% மட்டுமே வாய்ப்பு இருப்பதாக மார்கெட் எதிர்பார்க்கிறது.

    இந்த குழப்பமும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவரின் பேச்சு மீதான எதிர்பார்ப்பும் தான் தங்கம் விலை சரிவுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. குறிப்பாக இன்றைய தினம் வார்ஷ் உரை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விலைவாசியை கட்டுப்படுத்த வட்டியை நிச்சயம் உயர்த்துவோம் என்பது போல அவர் கூறினால்.. தங்கம் விலை மேலும் சரிய வாய்ப்புள்ளது. இருப்பினும், நீண்ட கால நோக்கில் தங்கம் விலை ஏறவே செய்யும் என்பதால் இந்த சரிவை முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்க பயன்படுத்தலாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

    Advertisement

    தங்கம் விலை

    சர்வதேச சந்தையை போலவே சென்னையிலும் இன்று தங்கம் விலை குறைந்தது. ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.600 குறைந்து ரூ.1,17,200க்கு விற்கப்படுகிறது. ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.75 குறைந்து ரூ.14,650க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ரூ.260க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.3040 சரிந்துள்ளது. அதேபோல வெள்ளி விலை கடந்த 4 நாட்களில் கிலோவுக்கு 15,000 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    தங்கம் கடந்து வந்த பாதை

    26.08.2026 - ஒரு சவரன் ரூ.. 1,19,520
    25.08.2026 - ஒரு சவரன் ரூ.. 1,17,800
    24.08.2026 - ஒரு சவரன் ரூ.1,20,240
    23.08.2026 - ஒரு சவரன் ரூ.1,19,600
    22.08.2026 - ஒரு சவரன் ரூ.1,19,600
    21.08.2026 - ஒரு சவரன் ரூ.1,18,800
    20.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,16,800

    English Summary

    Gold Rate Today and silver rate today (தங்கம் விலை இன்று) [28 August 2025]: திடீரென சரியும் தங்கம் விலை