சென்னை: தங்கம் விலையில் கடந்த சில காலமாகவே பெரியளவில் ஏற்ற இறக்கம் எதுவும் இல்லாமல் இருந்து வருகிறது. இதற்கிடையே இன்றைய தினம் தங்கம் விலை திடீரென உயர்ந்துள்ளது. இன்றைய தினம் சென்னையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஆபரண தங்கம் விலை ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 1,06,800க்கு விற்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் கிராமுக்கு ரூ.9000 என்பதில் இருந்து ரூ.15,000 வரை பாய்ந்தது. அதற்கு முக்கிய காரணமே டிரம்ப் தான். அவர் அதிபரான பிறகு எடுத்த பல சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் காரணமாக தங்கம் விலை இப்படி பாய்ந்தது.
இந்தச் சூழலில் தான் கடந்த சில காலமாக தங்கம் விலை சரிந்தது. அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வது, கச்சா எண்ணெய் விலை ஏற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை மெல்ல சரிந்து வந்தது. இது பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பொதுமக்கள் ஆர்வமாக மீண்டும் தங்கத்தை வாங்க ஆரம்பித்தனர். இந்தச் சூழலில் தான் இன்று மீண்டும் டிரெண்ட் மாறியிருக்கிறது. இதற்கு முக்கிய காரணமே வளைகுடா போர் தான் என்று சர்வதேச வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். முதலில் அமெரிக்கா ஈரான் இடையே மீண்டும் போர் வெடித்த நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. தங்கம் விலை சரிய இதுவே முக்கியமான காரணமாக இருந்தது. இதற்கிடையே அந்த மோதல் முடிவுக்கு வரும் சூழல் உருவாகியுள்ள நிலையில், தங்கம் விலை உயர ஆரம்பித்துள்ளது. அதாவது பொதுவாகவே கச்சா எண்ணெய் விலையும் தங்கம் விலையும் நேர் எதிராக இருக்கும். கச்சா எண்ணெய் ரேட் உயர்ந்தால் தங்கம் விலை சரியும். இத்தனை காலம் இதுதான் நடந்தது. அதேநேரம் கச்சா எண்ணெய் ரேட் சரிந்தால் தங்கம் விலை உயரும். இப்போது அதுதான் நடக்க ஆரம்பித்துள்ளது. அதேநேரம் மறுபுறம் அமெரிக்க மத்திய வங்கி எடுக்கும் முடிவும் இங்கு கவனம் பெறுகிறது.. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்தலாம் என சொல்லப்படுகிறது. அங்கு பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தலாம். அப்படி உயர்த்தினால் தங்கம் விலை மேலும் சரியும். செப்டம்பர் மாத மீட்டிங்கில் வட்டி விலை உயர்த்தப்பட 62% வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், அப்படி நடந்தால் தங்கம் விலை சரியும். எனவே, அதையும் நாம் கவனிக்க வேண்டும். அடுத்த வாரம் அமெரிக்க பணவீக்கம் குறித்த டேட்டா வரும் நிலையில், அதைப் பொறுத்தே தங்கம் விலையில் மாற்றம் இருக்கும்! இன்றைய தினம் சென்னையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஆபரண தங்கம் விலை ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 1,06,800க்கு விற்கப்படுகிறது. அதேபோல ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.30 உயர்ந்து, ரூ.13,350க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ.245க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,800 9-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,560 8-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,600 7-07-2026- ஒரு சவரன்- ரூ.1,07,200 6-07-2026- ஒரு சவரன்- ரூ.1,08,480 5-07-2026- ஒரு சவரன்- ரூ.1,09,600 4-07-2026- ஒரு சவரன்- ரூ.1,09,600தங்கம் விலை
உயர என்ன காரணம்
வட்டி விகிதம்
தங்கம் விலை
கடந்து வந்த பாதை