Gold Rate Today: தள்ளாடும் தங்கம் விலை.. ஒரே நாளில் மிக பெரிய சரிவு! இன்றைய ரேட் என்ன தெரியுமா

  • சென்னை: தங்கம் விலை கடந்த சில வாரங்களாகவே ஏற்றம் இறக்கம் என மாறி மாறி இருந்து வருகிறது. குறிப்பாக மத்திய கிழக்கு போர் காரணமாக தங்கம் விலை எப்படி இருக்கும் என்பதில் தெளிவு இல்லாத ஒரு சூழலே நிலவி வருகிறது. இதற்கிடையே சர்வதேச சந்தையில் தங்கம் விலை நேற்று சரிந்த நிலையில், இங்கும் விலை சரிந்துள்ளது. இன்றைய தினம் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளது.

    Advertisement

    தங்கம் விலை இப்போது சடன் பிரேக் போட்டு இருக்கிறது என்றே சொல்லலாம். கடந்த சில ஆண்டுகளாக ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்த தங்கம் இப்போது தான் கொஞ்சம் சரிவின் பாதைக்கு திரும்பியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை சரிந்து வரும் நிலையில், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    Advertisement

    அமெரிக்கா

    இப்போதைய சூழலில் தங்கம் விலையை நிர்ணயம் செய்வதில் இரு முக்கிய விஷயங்கள் உள்ளன. முதலில் அமெரிக்காவின் விலைவாசி. அமெரிக்க பணவீக்கம் எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை. சமீபத்தில் வெளியான பிபிஐ எனப்படும் உற்பத்தியாளர் விலை குறியீடும் 0.3 சதவீதம் சரிந்துள்ளது. இப்படி நிலைமை கட்டுக்குள் இருப்பதால் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை மேலும் உயர்த்தும் வாய்ப்பு குறையும் என்ற மார்கெட் நினைக்கிறது. அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை என்றால் தங்கம் விலை உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    வளைகுடா

    அதேநேரம் மறுபுறம் வளைகுடாவில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அதேபோல ஈரானும் அங்குள்ள அமெரிக்க படைகளுக்கு பதிலடி தரும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இதனால் மீண்டும் ஹார்முஸில் பாதிப்பு வந்து கச்சா எண்ணெய், எல்பிஜி உள்ளிட்டவற்றின் வர்த்தகம் பாதிக்கப்படலாம் என அச்சம் எழுந்துள்ளது.

    Advertisement

    இதனால் கச்சா எண்ணெய் விலை ஏற்கனவே 81 லாடரை தாண்டிவிட்டது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்தால் டாலர் மதிப்பு உயரும். அப்போது தங்கம் விலை சரியும். மேலும், கச்சா எண்ணெய் ரேட் உயரும் போது சர்வதேச பணவீக்கம் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அப்படியான சூழலில் மத்திய வங்கி வட்டியை உயர்த்தலாம். இதுவும் தங்கத்தின் முதலீட்டை குறைக்கும்.

    4000 மார்க்

    இப்போது சர்வதேச சந்தையில் 4000 டாலர் என்பது மிக பெரிய சப்போர்ட்டாக இருக்கிறது. அந்த 4,000 டாலருக்கு கீழே உடைத்து கொண்டு போக முடியாமல் இழுபறியில் இருக்கிறது. ஒருவேளை அந்த 4000 டாலரை உடைத்தால் தங்கம் விலையில் மிக பெரிய சரிவு ஏற்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    சென்னையில் நேற்றைய தினம் ஆபரண தங்கத்தின் விலை சரிந்தது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.240 குறைந்து, ரூ.1,05,200-க்கு விற்பனையானது. அதேபோல ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.13,150-க்கு விற்பனையானது.

    இன்றைய விலை

    சென்னையில் தங்கம் விலை இன்று பெரியளவில் சரிந்தது.. ஆபரண சங்கம் ஒரு சவரன் ரூ.400 குறைந்து, இன்று ரூ.1,04,800க்கு விற்பனையாகிறது.. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.50 குறைந்து, ரூ.13,100க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல வெள்ளி விலையும் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் ரூ.235க்கு விற்பனையாகிறது.

    தங்கம் - கடந்து வந்த பாதை

    17-07-2026- ஒரு சவரன்- ரூ.1,04,800

    16-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,200

    15-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,440

    14-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,200

    13-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,600

    12-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,400

    11-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,400

    10-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,800

    9-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,560

    8-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,600

    English Summary

    Gold Rate Today and silver rate today (தங்கம் விலை இன்று) [17 July 2025]: மீண்டும் சரிவின் பாதையில் தங்கம் விலை