Gold Rate Today: வாரத்தின் முதல் வர்த்தக நாளே தங்கம் கொடுத்த அதிர்ச்சி.. விலை ஏறிடுச்சு!

  • சென்னை: சர்வதேச மார்கெட்டில் இப்போது தங்கம் விலை தடுமாறி வருகிறது. சில நாட்கள் தொடர்ந்து சரிவது, பிறகு ஒரு நாள் ஏறுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறது. வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று தங்கம் விலை லேசாக உயர்ந்துள்ளது. இப்போது ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ. 1,05,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Advertisement

    இந்தியாவில் பொதுமக்களுக்கு தங்கம் தான் எப்போதுமே புதிய சேமிப்பாக இருந்துள்ளது. தங்கம் குறையும் போது அதை வாங்குவது, கஷ்ட காலத்தில் தங்கத்தை அடகு வைப்பது தான் மக்களுக்கு தெரியும். இதனால் இந்தியாவில் எப்போதுமே தங்கத்திற்கு டிமாண்ட் இருக்கும்.

    Advertisement

    தங்கம் விலை

    கடந்த சில ஆண்டுகளை பொருத்தவரை தங்கம் விலை கண்ணை மூடி திறப்பதற்குள் உச்சத்திற்கு போய்விட்டது. அதிலும் சில மாதங்களுக்கு முன்பு வரை தங்கம் விலை கிராமுக்கு ரூ.15,000ஐ கூட தாண்டியது. அதன் பிறகே சர்வதேச காரணங்களால் தங்கம் விலை இப்போது சரிந்துள்ளது. இப்போது கிராமுக்கு ரூ.13,000 என்ற ரேஞ்சில் வர்த்தகமாகிறது.

    வரும் மாதங்களிலும் தங்கம் விலை தொடர்ந்து சரியும் என்றே வல்லுநர்கள் கூறுகிறார்கள். இதற்கு இரு முக்கியமான காரணங்களை அவர்கள் பட்டியலிடுகிறார்கள். முதல் காரணம் வளைகுடா பதற்றம். இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்வது, தங்கம் விலை சரிவுக்குக் காரணமாக இருக்கிறது. அமெரிக்க பெடலர் ரிசர்வ் கூட வட்டி விகிதத்தை உயர்த்தலாம் என சொல்லப்படும் நிலையில், அதுவும் கூட தங்கம் விலை சரிவுக்கு காரணமாக இருக்கிறது.

    Advertisement

    சர்வதேச மார்கெட்

    சர்வதேச மார்கெட்டில் இப்போது தங்கம் விலை 4000 டாலரிலேயே தள்ளாடிக் கொண்டு இருக்கிறது. 4000 டாலருக்கு கீழ் போனால் பெரியளவில் சரிவை சந்திக்கும் என்றே தெரிகிறது. அதேநேரம், இந்தியாவில் ரூபாய் மதிப்பும் சரிவதால் தங்கம் விலை பெரியளவில் சர்வதேச மார்கெட்டிற்கு இணையாக சரியவில்லை.

    இன்றைய தங்கம் விலை

    கடந்த வாரம் பல நாட்கள் குறைந்த தங்கம் விலை சனிக்கிழமை திடீரென உயர்ந்தது. அப்போது ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ரூ. 1,05,080க்கு விற்பனையானது. ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ரூ.13,135க்கு விற்பனையா செய்யப்பட்டது.. நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலை மாற்றமின்றி விற்பனையானது.

    Advertisement

    வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று தங்கம் விலை லேசாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தினம் தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலை சரவனுக்கு ரூ.120 உயர்ந்து, ரூ. 1,05,200க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.15 உயர்ந்து. ரூ.13,150க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் - கடந்து வந்த பாதை

    20-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,200

    19-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,080

    18-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,080

    17-07-2026- ஒரு சவரன்- ரூ.1,04,800

    16-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,200

    15-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,440

    14-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,200

    Advertisement

    13-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,600

    12-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,400

    11-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,400

    10-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,800

    9-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,560

    8-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,600

    English Summary

    Gold Rate Today and silver rate today (தங்கம் விலை இன்று) [20 July 2025]: சர்வதேச சந்தையில் தடுமாறும் தங்கம் விலை!