சென்னை: கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை மீண்டும் ஏற்றத்தின் பாதைக்கு திரும்பியுள்ளது. சர்வதேச காரணங்களால் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்தே வருகிறது. நேற்றிரவு சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை உயர்ந்த நிலையில், அதுவே இன்று இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இன்றைய தினம் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது.
தங்கம் விலை கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு தொடர்ந்து சரிந்தே வந்தது. போர் வெடித்த சூழலில் கச்சா எண்ணெய் விலை உச்சத்திற்கு போனதால் மறுபுறம் தங்கம் விலை சட்டென சரிந்தது. இது தங்கம் வாங்க நினைத்தோருக்கு மிக சிறந்த ஒரு சான்ஸை கொடுத்தது.
இப்போது சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸுக்கு 4,052.78 டாலராக உயர்ந்து, வர்த்தகமாகி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் தங்கம் விலை பெரியளவில் உயரவில்லை என்ற போதிலும், மிக குறைந்த விலையேற்றத்தை பதிவு செய்திருந்தது. இதற்கான காரணத்தை விளக்கும் வல்லுநர் தை வோங் கூறுகையில், "கடன் பத்திரங்களில் இருந்து வரும் வருவாய் அதிகரிக்கிறது. எனவே, அதிகபட்ச முதலீட்டாளர்கள் அதை நோக்கியே செல்கிறார்கள். ஆனாலும், அதையும் தாண்டி சிலர் இப்போது விலை குறைவதால் தங்கம் வாங்கினர். அதுவே விலையேற்றத்திற்கு முக்கிய காரணம். போர் மேலும் தீவிரமடைந்தால் தங்கம் விலை மேலும் சரியலாம். அடுத்த வாரம் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் குறித்து எடுக்கும் முடிவும் முக்கியத்துவம் பெறும்" என்றார். இதற்கிடையில், சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 4 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தது. செங்கடலில் இரண்டு சவுதி எண்ணெய் கப்பல்களை தாக்கியதாக ஈரான் ஆதரவு ஹவுதி படை கூறிய நிலையில், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர ஆரம்பித்துள்ளது.. அது இப்போது 90 டாலரை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா ஈரான் போர் தொடங்கிய பிறகு, தங்கத்தின் விலை சுமார் 23 சதவீதம் வரை சரிந்துள்ளது. போர் காரணமாக பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுவதால், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு தங்கத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக தங்கம் பணவீக்கத்துக்கு எதிரான பாதுகாப்பான முதலீடாக கருதப்பட்டாலும், வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும் சூழலில் தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வம் குறைவது வழக்கம். அதாவது இப்போது தங்கம் விலை குறைந்தாலும் அடுத்த சில மாதங்களில் தங்கம் விலை சரியலாம் என்கிறார்கள் வல்லுநர்கள்! சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று உயர்ந்தது. ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.560 உயர்ந்து, ரூ.1,06,400க்கு விற்பனையானது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.70 உயர்ந்து, ரூ.13,300க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.240க்கு விற்கப்படுகிறது. 24-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,840 23-07-2026- ஒரு சவரன்- ரூ.1,08,000 22-07-2026- ஒரு சவரன்- ரூ.1,07,440 21-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,760 19-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,080 18-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,080 17-07-2026- ஒரு சவரன்- ரூ.1,04,800 16-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,200 15-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,440சர்வதேச மார்கெட்
கச்சா எண்ணெய்
அடுத்து என்ன
தங்கம் விலை
தங்கம் - கடந்து வந்த பாதை