Gold Rate Today: இன்று மொத்தமாக சரிந்த தங்கம் விலை.. இன்னைக்கு அடிச்சது பெரிய ஜாக்பாட்! செம ஹேப்பி

  • சென்னை: கடந்த சில ஆண்டுகளாக உயர்ந்து வந்த தங்கம் விலை இப்போது சடன் பிரேக் போட்டுள்ளது. இந்தியாவில் இறக்குமதி வரி உயர்த்தப்பட்ட போதிலும் கூட தங்கம் விலை பெரியளவில் உயரவில்லை.. மாறாகச் சரிந்தே வருகிறது. இதற்கிடையே சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை பெரியளவில் சரிந்ததால் இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்தது. இன்று ஒரே நாளில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.3040 குறைந்துள்ளது.

    Advertisement

    உலக அளவில் நிலவும் பொருளாதாரச் சூழல் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு காரணமாக, சர்வதேச சந்தையில் நேற்று வியாழக்கிழமை தங்கத்தின் விலை சரிவைக் கண்டுள்ளது. ஸ்பாட் கோல்ட் விலை 0.3 சதவீதம் குறைந்து ஒரு அவுன்ஸ் 4,245.99 டாலராக வர்த்தகமானது. அதேபோல் கோல்ட் ப்யூச்சர்ஸ் விலையும் கூட 2.6 சதவீதம் சரிந்து 4,265.50 டாலராகக் குறைந்துள்ளது.

    Advertisement

    காரணம்

    தங்கத்தின் விலை வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணமாக அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு பார்க்கப்படுகிறது. அமெரிக்க டாலர் 0.7 சதவீதம் வலுவடைந்துள்ளது. பொதுவாக டாலர் மதிப்பு உயரும்போது, மற்ற நாட்டு நாணயங்களை வைத்திருப்பவர்களுக்குத் தங்கம் வாங்குவது அதிக செலவு பிடிக்கும் விஷயமாக மாறுகிறது. இதனால் சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதைக் குறைத்துக் கொள்வதால் அதன் விலை இறங்குகிறது.

    அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிவிப்புகளும் தங்கத்தின் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. பெடரல் ரிசர்வ் வங்கி தற்போது வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யவில்லை என்றாலும், பணவீக்கம் இன்னும் கட்டுக்குள் வராததால் இந்த ஆண்டின் இறுதியில் வட்டி விகிதங்கள் உயர்த்தப்படலாம் என்பது போலக் கூறியுள்ளது.

    Advertisement

    மேலும், வங்கியின் செயல்பாடுகளை ஆய்வு செய்யப் புதிய குழுக்களை அமைப்பதாக பெடரல் ரிசர்வ் தலைவர் கெவின் வார்ஷ் தெரிவித்துள்ளார். வட்டி விகிதங்கள் உயரும்போது, வட்டி வருமானம் தராத முதலீடான தங்கத்தின் மீதான ஈர்ப்பு முதலீட்டாளர்களிடையே குறைகிறது.

    விலை குறையும்

    தற்போதைய நிலவரப்படி, டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட 88 சதவீத வாய்ப்புகள் இருப்பதாகச் சந்தை வல்லுநர்கள் கணிக்கின்றனர். இதனால் இந்தாண்டு இறுதியில் தங்கத்தின் விலை 5,000 டாலரைத் தொடுவதை விட, 4,000 டாலருக்கும் கீழே குறையவே அதிக வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.. மேலும், அமெரிக்கப் பொருளாதார டேட்டா வெளியாகும் போது தங்கத்தின் விலையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

    Advertisement

    தங்கத்திற்கான தேவை குறித்து ANZ வங்கி வெளியிட்டுள்ள குறிப்பில், முதலீடு ரீதியாகத் தங்கத்திற்கான தேவை தற்போது சற்று மந்தமாகவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ETF தங்கத்தில் இருந்து வெளியேறுவது அதிகரித்துள்ளது. இருப்பினும், சீனா போன்ற நாடுகளின் நேரடித் தேவை மற்றும் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கம் வாங்கி வருவது விலையை ஓரளவிற்குத் தாங்கிப் பிடித்து வருகிறது.

    மற்ற உலோகங்கள்

    தங்கத்தைப் போலவே மற்ற உலோகங்களின் விலையும் சரிவைச் சந்தித்துள்ளன. வெள்ளி விலை 1 சதவீதம் குறைந்து ஒரு அவுன்ஸ் 67.29 டாலராக உள்ளது. பிளாட்டினம் விலை 2.1 சதவீதம் குறைந்து 1,701.02 டாலராகவும், பல்லேடியம் விலை 2.6 சதவீதம் சரிந்து 1,277.79 டாலராகவும் வர்த்தகமாகிறது. சர்வதேச காரணங்களால் உலக சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ளதால், அதன் தாக்கம் இன்று சென்னை ஆபரணத் தங்க விலையிலும் எதிரொலித்தது.

    Advertisement

    நேற்றைய தினம் கூட காலையில் உயர்ந்த தங்கம் விலை மாலையில் சரிந்தது. காலையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.240 அதிகரித்து ரூ.1,12,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், மாலையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.880 குறைந்து ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்பட்டது..

    இன்றைய தங்கம் விலை

    சென்னையில் இன்று தங்கம் விலை சரிந்தது. ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.3040 குறைந்து, ரூ.1,08,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.380 குறைந்து, ரூ.13,570க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ரூ.255க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Advertisement

    தங்கம் விலை நிலவரம்

    19.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,560 (இன்று)

    18.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,11,600 (மாலை)

    18.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,480 (காலை)

    17.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,240

    16.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,480

    15.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,560

    English Summary

    Gold Rate Today and silver rate today (தங்கம் விலை இன்று) [19 June 2025]: பெரியளவில் சரியும் தங்கம் விலை