Gold Rate Today: தங்கம் விலை இனி ஏறுமா? தடாலடியாக சரியுதே ஏன்.. இன்று ரேட் எப்படி!

  • சென்னை: சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. சாதாரண மக்களுக்குத் தங்கம் விலை ஏன் திடீரென இவ்வளவு குறைகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கான முக்கிய காரணங்களையும் இன்றைய தினம் தங்கம் விலை என்ன என்பது தொடர்பாகவும் நாம் பார்க்கலாம்!

    Advertisement

    நேற்றைய தினம் சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை இறக்கத்தோடு வர்த்தகத்தை முடித்துள்ளது. அதாவது தொடர்ந்து 3வது வாரமாகத் தங்கம் விலை சரிந்துள்ளது. போர் முடிவுக்கு வந்தது, அமெரிக்கப் பணவீக்கம், பொருளாதாரம் என பல்வேறு காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.

    Advertisement

    நேற்று வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில், சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் தங்கம் விலை 4,160 டாலராக சரிந்தது. இது ஜூன் 11ம் தேதிக்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த விலையாகும். அதேபோல், கோல்ட் ஃபியூச்சர்ஸ் சரிந்து 4,172 டாலராக வர்த்தகமானது. இதுவே இந்தியா மார்கெட்டிலும் இப்போது எதிரொலித்து வருகிறது. இப்போது தங்கத்தின் விலை வீழ்ச்சிக்குப் பின்னால் மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.

    வலுவான அமெரிக்க டாலர்

    சர்வதேச சந்தையில் தங்கம் டாலர் மதிப்பிலேயே வர்த்தகம் செய்யப்படுகிறது. தற்போது அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதால், மற்ற நாட்டுப் பணத்தை வைத்திருப்பவர்களுக்குத் தங்கம் வாங்குவது அதிகச் செலவு பிடிக்கும் விஷயமாக மாறுகிறது. இதனால் தங்கத்திற்கான தேவை குறைந்து விலை சரிவடைகிறது.

    Advertisement

    அமெரிக்க பெடரல் ரிசர்வ் கொள்கை

    அமெரிக்காவின் மத்திய வங்கியான 'பெடரல் ரிசர்வ்', வட்டி விகிதங்களை இப்போதைக்குக் குறைக்கப் போவதில்லை என்ற சிக்னலை கொடுத்துள்ளது. பொதுவாக வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும்போது, முதலீட்டாளர்கள் வட்டி தராத தங்கத்தில் முதலீடு செய்வதை விட, டாலர் அல்லது வங்கிப் பத்திரங்களில் முதலீடு செய்ய விரும்புவார்கள். இந்தாண்டு இறுதிக்குள் அமெரிக்க வட்டி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்பு அதிகம் எனச் சொல்லப்படும் நிலையில், தங்கத்தை விட்டு முதலீட்டாளர்கள் மேலும் தள்ளி இருப்பார்கள்.

    மத்திய கிழக்கு நாடுகளின் சூழல்

    போர் மற்றும் அரசியல் பதற்றங்கள் நிலவும்போது தங்கம் விலை உயரும். ஆனால், தற்போது இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இது சந்தையில் நிலவிய பதற்றத்தைக் குறைத்து, தங்கத்தின் மீதான ஈர்ப்பைக் குறைத்துள்ளது.

    Advertisement

    வல்லுநர்கள்

    இது தொடர்பாக மூத்த சந்தை ஆய்வாளர் நிகோஸ் ஜாபுராஸ் கூறுகையில், "தங்கம் விலை 4,000 டாலருக்கும் கீழே செல்ல வாய்ப்புள்ளது. வட்டி விகிதங்கள் உயரும் என்ற எதிர்பார்ப்பு தங்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது" என்று தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தையில் நிலவும் இழுபறியும் தங்கத்தின் விலையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்துள்ளதால், ஈரான் உடனான பேச்சுவார்த்தை தள்ளிப்போயுள்ளது.

    உலகின் முன்னணி முதலீட்டு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ், இதற்கு முன்பு டிசம்பர் மாதத்திற்குள் தங்கம் 5,400 டாலரைத் தொடும் என்று கணித்திருந்தது. தற்போது அதை 4,900 டாலராகக் குறைத்துள்ளது. தற்போதைக்கு விலை குறைந்தாலும், நீண்ட காலத்தில் தங்கம் மீண்டும் உயர வாய்ப்புள்ளதாக அவர்கள் கருதுகின்றனர்.

    Advertisement

    தங்கம்

    நேற்றைய தினம் சென்னையில் தங்கம் விலை சற்றே உயர்ந்தது.. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,08,800-க்கு விற்பனையானது. அதேபோல தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,600-க்கு விற்பனையானது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.255க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை நிலவரம்

    20.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,800

    19.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,560

    18.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,11,600 (மாலை)

    18.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,480 (காலை)

    Advertisement

    17.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,240

    16.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,480

    15.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,560

    English Summary

    Gold Rate Today and silver rate today (தங்கம் விலை இன்று) [21 June 2025]: இன்றைய தங்கம் விலை