சென்னை: நமது நாட்டில் எப்போதுமே தங்கம் தான் மக்களுக்கு முதல் முதலீடாக இருந்து வருகிறது. இதனால் கடந்த சில வாரங்களாகத் தங்கம் விலை சரிந்து வந்தது பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இன்றைய தினம் சந்தையில் தங்கம் விலை குறைந்திருப்பதால், இந்தியாவிலும் தங்கம் விலை குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.320 குறைந்து, ரூ.1,08,480க்கும் விற்பனையாகிறது.
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை, நேற்று திங்கட்கிழமை சர்வதேச சந்தையில் ஒரு எழுச்சியைக் கண்டது. சர்வதேச சந்தையில் நிலவும் பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள், குறிப்பாகக் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு, தங்கத்தின் இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. இருப்பினும், காலைக்குள் சர்வதேச மார்கெட்டில் தங்கம் மீண்டும் சரிந்தது.
கச்சா எண்ணெய் சந்தையில் இருந்து வெளியேறும் முதலீடுகள் மீண்டும் தங்கத்தை நோக்கித் திரும்புவதே இந்த மாற்றத்திற்குக் காரணமாகும். இந்த விலை மாற்றத்திற்குப் பின்னால் ஒரு முக்கியமான சர்வதேச அரசியல் நகர்வு உள்ளது. சுவிட்சர்லாந்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாட்டு உயர் அதிகாரிகள் இடையே நடைபெற்ற முதற்கட்டப் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அமைதிப் பேச்சுவார்த்தை காரணமாக, கச்சா எண்ணெய் விநியோகத்தில் இருந்த தடைகள் நீங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் காரணமாகவே, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை சுமார் 2 சதவீதம் வரை சரிந்தது. பொதுவாக, கச்சா எண்ணெய் விலை உயரும்போது அது உலகளாவிய பணவீக்கத்தை அதிகரிக்கும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்தும். வட்டி விகிதங்கள் உயரும்போது, வட்டி வருமானம் தராத தங்கத்தின் மீதான முதலீடு குறையும். ஆனால் இப்போது எண்ணெய் விலை குறைந்துள்ளதால், பணவீக்க அச்சம் சற்று தணிந்து, தங்கத்திற்குச் சாதகமான சூழல் உருவாகியுள்ளது. இருப்பினும், அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்கள் குறித்து எடுத்துள்ள கடுமையான நிலைப்பாடு முதலீட்டாளர்களை இன்னும் எச்சரிக்கையுடனேயே வைத்திருக்கச் செய்கிறது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் தலைவர் கெவின் வார்ஷ், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தனது வங்கி உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதனால், வரும் டிசம்பர் மாதத்தில் வட்டி விகிதங்கள் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பு 89 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் கடந்த சில ஆண்டுகளைப் போலத் தங்கம் விலை உச்சத்திற்குப் போகுமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. நேற்றைய தினம் தங்கம் விலையில் மாற்றமின்றி தொடர்ந்தது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,08,800-க்கு விற்பனையானது. அதேபோல தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,600-க்கு விற்பனையானது. இன்றைய தினம் தங்கம் விலை சற்று குறைந்தது. சென்னையில் 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.13,560க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல வெள்ளி விலை ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.250க்கு விற்பனையாகிறது. 23.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,480 22.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,800 21.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,800 20.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,800 19.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,560 18.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,11,600 (மாலை) 18.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,480 (காலை) 17.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,240 16.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,480 15.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,560காரணங்கள்
அமெரிக்க பெடரல் வங்கி
தங்கம்
தங்கம் விலை நிலவரம்