ஒரு மணி நேரத்தில் ரூ.1,960 குறைந்த தங்கம் விலை.. சென்னையில் தாறுமாறாக சரிந்தது! மிஸ் பண்ணாதீங்க

  • சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. காலையில் முதலில் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த ஒரு மணி நேரத்திலேயே தங்கம் விலை பெரிய அளவில் சரிந்தது. இதன்படி, ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,960 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Advertisement

    இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. சர்வதேச சந்தையில் நடந்த மாற்றம் காரணமாக தங்கம் விலை இந்தியாவிலும் தொடர்ந்து சரிந்து வந்தது. இதனால் நகைப்பிரியர்கள் குஷியாகிவிட்டனர். ஆனால், கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் திடீர் ட்விஸ்ட் ஏற்பட்டது.

    Advertisement

    தங்கம் விலை

    கடந்த 4 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதனால் தீபாவளி நாளில் தங்கம் விலை உச்சம் தொடுமா என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டது. இந்தச் சூழலில் நகைப்பிரியர்களுக்கு சந்தோஷம் தரும் தகவல் இப்போது வெளியாகியுள்ளது. இன்றைய தினம் முதலில் காலையில் தங்கம் விலையில் மாற்றமில்லை என்ற அறிவிப்பு வெளியாகி இருந்தது.

    திடீர் ஏற்றம்

    இந்த சூழலில் தான் ட்விஸ்ட் கொடுத்த தங்கம் விலை ஒரு மணி நேரத்தில் மிக பெரியளவில் சரிந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,960 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ.245 குறைந்து ரூ.13,140க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.205க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Advertisement

    சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை இன்று சரிவை சந்தித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்திருப்பது பணவீக்கம் குறித்த கவலையை அதிகரித்துள்ளது. இதனால் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை நீண்ட காலத்துக்கு உயர்ந்த நிலையிலேயே வைத்திருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இது தங்கம் விலையில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சர்வதேச சந்தை

    சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1.1 சதவீதம் குறைந்து 4,044.09 டாலராக இருந்தது. அமெரிக்காவில் டிசம்பர் மாத டெலிவரிக்கான கோல்ட் ப்யூச்சர்ஸ் விலையும் 1.5 சதவீதம் சரிந்து 4,053.30 டாலராக இருந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது தங்கத்தின் விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    Advertisement

    இதற்கிடையே அமெரிக்காவின் வேலைவாய்ப்பு நிலவரம் தொடர்பான முக்கியமான டேட்டா இன்று வெளியாக உள்ளன. இதன் அடிப்படையில் பெடரல் ரிசர்வ் வங்கியின் அடுத்தகட்ட வட்டி விகித முடிவுகள் இருக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை அமெரிக்கா உயர்த்தும் என்றே தெரிகிறது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை மேலும் சரியும்.

    கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

    6-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,120

    5-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,07,080

    4-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,800 (மதியம்)

    Advertisement

    4-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,02,600 (காலை)

    3-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,02,400

    2-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,02,200

    1-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,01,840

    English Summary

    Gold Rate Today and silver rate today (தங்கம் விலை இன்று) [6 November 2026]: தாறுமாறாக சரியும் தங்கம் விலை