Gold Rate Today: பாதாளத்தில் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.1,560 குறைவு.. நகை பிரியர்கள் உற்சாகம்

  • சென்னை: சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் சூழலில், இந்தியாவிலும் அது எதிரொலித்து வருகிறது. சென்னையிலும் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.280 குறைந்து ரூ.1,09,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,560 குறைந்துள்ளது.

    Advertisement

    சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை சரிந்ததுடன், அமெரிக்காவின் பணவீக்க விவகாரங்களும் தொடர்ந்து வெளியாகி வருவதால் அமெரிக்க முதலீட்டாளர்கள் அதை கவனித்து வருகின்றனர்.

    Advertisement

    சர்வதேச மார்கெட்

    நேற்று தங்கம் விலை சர்வதேச மார்கெட்டில் மிக பெரியளவில் சரிந்தது. அதன் பிறகு சர்வதேச மார்கெட்டில் லேசாக உயர்ந்தது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.4% உயர்ந்து 4,185.69 டாலராக இருந்தது. அதேபோல கோல்ட் ப்யூச்சர்ஸ் விலையும் 0.5% உயர்ந்து 4,209.90 டாலராக இருந்தது.

    அமெரிக்காவின் நுகர்வோர் விலைக் குறியீடு நாளை புதன்கிழமையும், உற்பத்தியாளர் விலை குறியீடு வியாழக்கிழமையும் வெளியாக உள்ளன. இந்த டேட்டாவை தான் சர்வதேச முதலீட்டாளர்கள் உற்று கவனித்து வருகிறார்கள். அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் மாற்றுவது தொடர்பான முடிவுகளை இந்த டேட்டாவை வைத்தே எடுக்கும் என்பதாலேயே இது கவனிக்கப்படும் ஒன்றாக இருக்கிறது.

    Advertisement

    பணவீக்கம்

    பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்தால், அக்டோபரில் வட்டி விகிதம் மீண்டும் உயர்த்தப்படும். அத்தகைய சூழலில் தங்கத்தின் விலை மீண்டும் குறைய வாய்ப்புள்ளதாக முதலீட்டாளர்கள் கூறுகிறார்கள். அதே நேரத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்வு பணவீக்கக் கவலைகளை அதிகரிக்கிறது. வட்டி விகிதங்கள் உயரும்போது, வருவாய் தரும் முதலீடுகளுக்கு முதலீட்டாளர்கள் முக்கியத்துவம் அளிக்கக்கூடும் என்பதால், தங்கத்தின் விலையிலும் தாக்கம் ஏற்படலாம்.

    இந்தியாவை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்றைய தினம் காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்த நிலையில், மாலையில் சவரனுக்கு ரூ.960 குறைந்தது. இதனால் சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,09,760-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.120 குறைந்து ரூ.13,720-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    Advertisement

    தங்கம் விலை

    சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.35 குறைந்து ரூ.13,685-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,09,480 ஆக உள்ளது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,560 குறைந்திருப்பது நகை பிரியர்களுக்கு உற்சாகத்தை தருகிறது. இதற்கிடையே வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த சில நாட்களில் தங்கம் விலை

    12-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,760 (மாலை)

    12-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,10,720 (காலை)

    Advertisement

    11-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,11,040

    10-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,11,040

    08-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,860

    07-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,860

    English Summary

    Gold Rate Today and silver rate today (தங்கம் விலை இன்று) [13 October 2025]: தொடர்ந்து குறையும் தங்கம் விலை