சென்னை: உலக சந்தையில் தங்கம் விலை சரிந்துள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் இந்தாண்டு வட்டி விகிதத்தை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், உலகின் பிற மத்திய வங்கிகளும் அதேபோல வட்டியை உயர்த்தலாம் என தெரிகிறது. இதன் காரணமாக தங்கம் விலை சரிய ஆரம்பித்துள்ளது. இது இந்திய சந்தையில் இன்று இன்று எதிரொலித்த நிலையில், தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது..
இந்தாண்டு தொடக்கத்தில் தங்கம் விலை கணிசமாகவே குறைந்திருந்தது. இருப்பினும், கடந்த சில வாரங்களில் தங்கம் விலை மீண்டும் உயர ஆரம்பித்துவிட்டது. தங்கம் விலை சீராக உயர்ந்து வந்த நிலையில், பொதுமக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பமடைந்தனர். தங்கம் விலை குறையுமா அல்லது உயருமா என்பதில் தெளிவற்ற சூழல் ஏற்பட்டது.
இதற்கிடையே அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டியை உயர்த்தியுள்ள நிலையில், தங்கம் விலை சர்வதேச சந்தையில் குறைய ஆரம்பித்துள்ளது. ஸ்பாட் தங்கம் 0.3 சதவீதம் குறைந்து ஒரு அவுன்ஸ் 4,361.96 டாலராக இருந்தது. அதேபோல், அமெரிக்க கோல்ட் ஃபியூச்சர்ஸ் விலை 0.6 சதவீதம் சரிந்து 4,400 டாலராக இருந்தது. மறுபுறம் டாலர் மதிப்பு லேசாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தியதை தொடர்ந்து, டாலர் ஏற்கனவே 1 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. பொதுவாக டாலர் மதிப்பு உயரும் போது தங்கம் விலை சரியும். இப்போதும் அதுவே நடந்துள்ளது. அதேநேரம் இது மேலும் தொடரலாம் எனவும் தெரிகிறது. ஏனென்றால் அமெரிக்க பெடரல் ரிசர்வ் டிசம்பரில் மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக மார்கெட் கருதுகிறது. டிசம்பர் மாதம் வட்டியை உயர்த்த 88 சதவீதம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தைவிட வட்டி தரும் முதலீடுகளை நோக்கி செல்லும் சூழல் உருவாகியுள்ளது. பொதுவாக பணவீக்கத்துக்கு எதிரான பாதுகாப்பு முதலீடாக தங்கம் கருதப்படுகிறது. ஆனால், வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும் சூழலில், வட்டி வருவாய் தரும் முதலீடுகள் பக்கம் முதலீட்டாளர்கள் போய்விடுவார்கள். இதனால் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்து விலையும் குறையும். அமெரிக்கா மற்றும் ஈரான் காரணமாக எரிசக்தி விலை உயர்ந்துள்ளது. இதனால் அமெரிக்கா மட்டுமின்றி சர்வதேச அளவில் விலைவாசி உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்காவை போலவே மேலும் பல நாடுகள் வட்டி விகிதத்தை உயர்த்தும் என தெரிகிறது. அப்படி வட்டியை உயர்த்தும்போது தங்கம் விலை இயல்பாகவே குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தையில் பிப்ரவரி 27ஆம் தேதியுடன் ஒப்பிடும்போது தங்கத்தின் விலை இப்போது சுமார் 17 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நேற்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,14,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.14,270-க்கு விற்பனையானது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை சீராக குறையும் நிலையில், இன்றும் அது தொடரும் என்றே தெரிகிறது. இதற்கிடையே இன்றைய தினம் சென்னையில் ஆபரண தங்கம் விலை தடாலடியாக குறைந்தது. சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து, ரூ.1,13,480க்கு விற்பனையாகிறது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.85 குறைந்து, ரூ.14,185க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.285க்கு விற்பனையாகிறது. 21-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,13,480 20-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.114,280 19-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.114,280 18-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.113,240 17-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.112,080சர்வதேச மார்கெட்
அமெரிக்க வட்டி விகிதம்
அடுத்து என்ன
தங்கம் விலை