சென்னை: சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை திங்கட்கிழமை வரை கடுமையாக சரிந்த நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை மீண்டும் உயர தொடங்கியுள்ளது. அமெரிக்க பொருளாதார டேட்டா மற்றும் அந்நாட்டு மத்திய வங்கியான பெடரல் ரிசர்வின் அடுத்தகட்ட வட்டி விகித முடிவுகள் குறித்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தங்கம் விலை கவனிக்க வைக்கும் ஒன்றாக மாறியுள்ளது. இதற்கிடையே இன்றைய தினம் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
தங்கம் விலை கடந்த சில வாரங்களாகவே சீராக குறைந்து வந்தது. இடையில் ஓரிரு நாட்கள் குறைந்தாலும் கூட ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது தங்கம் விலை சீராக குறைந்தே வந்தது. சர்வதேச சந்தையில் தொடர்ச்சியாக விலை சரிந்த நிலையில், இந்திய சந்தையிலும் அது எதிரொலித்தது.
நேற்று செவ்வாய்க்கிழமை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1.1 சதவீதம் உயர்ந்து 4,158.28 டாலராக இருந்தது. திங்கட்கிழமை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 4 சதவீதம் சரிந்து, 4,110.55 டாலர் வரை போனது. இந்தச் சூழலில் தான் நேற்று சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததை தொடர்ந்து, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு சந்தையில் அதிகரித்தது. தங்கம் பொதுவாக வட்டி வருவாய் வழங்காத முதலீடாக இருப்பதால், வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் சூழலில் முதலீட்டாளர்கள் வட்டி வருவாய் தரும் முதலீடுகளை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. இதனால் தங்கத்தின் மீதான தேவை குறைந்து, அது சரிய ஆரம்பிக்கும். இது தொடர்பாக ஆக்டிவ் டிரேட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரிக்கார்டோ எவாஞ்சலிஸ்டா கூறுகையில், "தங்கத்தின் டிரெண்ட் மாறிவிட்டதாக சொல்ல முடியாது. திங்கள்கிழமை கடுமையாக சரிந்ததால் நேற்று லேசாக விலை உயர்ந்துள்ளது. முதலீட்டாளர்கள் மனநிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டதற்கான அறிகுறியாக தெரியவில்லை" என்றும் தெரிவித்தார். மத்திய கிழக்கில் மோதல் தொடரும் சூழலில், கச்சா எண்ணெய் விலை நிலையாக இருக்கிறது.. எண்ணெய் விலை தொடர்ந்து அதிகமாக இருந்தால், பணவீக்க அழுத்தம் அதிகரிக்கலாம். இதனால் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை நீண்ட காலத்துக்கு உயர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டிய சூழல் உருவாகலாம். அதுபோன்ற சூழல்களில் தங்கம் விலை மேலும் சரியும். நேற்றைய தினம் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,640க்கு விற்கப்பட்டது. ஒரு சவரன் ரூ.200 குறைந்து, ரூ.1,09,120க்கு விற்பனை செய்யப்பட்டது.. வெள்ளி விலையை பொறுத்தவரையில் கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.240க்கும் விற்பனையானது. இதற்கிடையே சென்னையில் இன்றைய தினம் தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ரூ.1,09,680க்கு விற்பனையாகிறது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.13,710க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ரூ.245க்கு விற்பனை செய்யப்படுகிறது 30-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,09,680 29-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,09,120 28-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,09,320 (மாலை) 28-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,10,120 (காலை) 27-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,12,000 26-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,12,000 25-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,12,080 24-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,12,000தங்கம் விலை
வல்லுநர்கள் சொல்வது என்ன
இன்றைய விலை விவரம்
கடந்த சில நாட்களில் தங்கம் விலை