சென்னை: கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 57,000 ஆக இருந்த தங்கத்தின் விலை டிசம்பரில் ஒரு லட்சத்தை தாண்டியது. தொடர்ந்து 2026இல் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாகவே இருக்கும் நிலையில் இந்த ஆண்டு இறுதியில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து பிரபல கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் கணித்திருக்கிறது.
கடந்த சில வாரங்களாகவே தங்கத்தின் விலை நிலை இல்லாமல் இருக்கிறது. கடந்த 10 நாட்களில் சுமார் 4,500 வரை தங்கத்தின் விலை குறைந்த நிலையில் அதே அளவு உயர்ந்து இருக்கிறது. இதனால் வரும் நாட்களில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என முதலீட்டாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
கடந்த ஆண்டு 2025-ல் தங்கத்தின் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஜனவரி மாதத்தில் 57 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையா தங்கத்தின் விலை அக்டோபர் மாதமே சவரன் 97 ஆயிரம் என்ற விலையை தொட்டது.
தற்போது 1 லட்சத்து 15 ஆயிரம் வரை தங்கத்தின் விலை இருக்கும் நிலையில் 2026 ஆம் ஆண்டு இறுதியில் தங்கத்தின் விலை எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை தங்கத்தின் விலை எப்படி உயரும் என்பது குறித்து சர்வதேச சந்தையில் நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் ஒரு கணிப்பை வெளியிட்டு இருக்கிறது. அந்த கணிப்பின்படி தங்கத்தின் விலை 8% வரை அதிகரிக்கலாம் என்கின்றன. அப்படி அதிகரிக்கும் போது இந்திய சந்தைகளில் 10 கிராம் தங்கத்தின் விலை 1 லட்சத்து 69 ஆயிரம் என்ற விலையை எட்ட இருப்பதாக சொல்கின்றனர். அதே நேரத்தில் தங்கத்தின் விலை எப்போதும் சர்வதேச சந்தை நிலவரத்தை மட்டுமே சார்ந்து இருப்பதில்லை. டாலருக்கு நிகரான ரூபாயில் மதிப்பு, இறக்குமதி வரிகள் மற்றும் பிற வரிகளும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பல்வேறு உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்க கொள்முதலை அதிகரித்து வருவது தங்கத்தின் விலை ஏறுவதற்கான சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது. வரும் நாட்களில் தங்கத்தின் விலை இன்னும் அதிகமாகலாம் என்றும் கோல்ட்மேன் சாக்ஸ் கருதுகிறது. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று மத்திய வங்கிகள் தங்கத்தை கொள்முதல் செய்வது ஆகும். பல்வேறு உலக நாடுகள் தங்கள் அந்நிய செலாவணி கையிருப்பில் தங்கத்தின் பங்கை அதிகரித்து வருகின்றன. கோல்ட்மேன் சாக்ஸ் வெளியிட்டுள்ள் தகவலின் படி பல்வேறு உலக நாடுகளின் ரிசர்வ் வங்கிகள் இந்த ஆண்டு சராசரியாக 50 டன் தங்கத்தை வாங்க திட்டமிட்டுள்ளதாக சொல்கிறது. 2022 ஆம் ஆண்டுக்கு முன்பு மாதத்திற்கு 17 டன் என்ற அளவில் தங்க கொள்முதல் இருந்த நிலையில் ஜூன் 2026 தங்க கொள்முதல் அதிகரித்திருப்பதாக சொல்கிறது. குறிப்பாக கடந்த மாதம் இந்த தங்க கொள்முதல் மாதத்திற்கு 100 டன் என்ற அளவில் இருந்தது. அதற்கு முன் வெறும் 66 டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜூன் மாதத்தில் உலக அளவில் அதிக அளவில் தங்கத்தை வாங்கி குவித்த மதிய வங்கிகளின் பட்டியலில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. 2026 ஆம் ஆண்டு பொருத்தவரை தங்கத்தின் விலை குறைந்தது போல் தான் இருந்தது. இந்த ஆண்டில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கத்தோடு காணப்பட்டது அனைவரும் அறிந்தது தான். கடந்த ஜனவரி 29ஆம் தேதி தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 5600 டாலர் என்ற அளவில் உயர்ந்தாலும், ஜூலை மாதத்தில் அது 4000 டாலராக குறைந்து இருக்கிறது. அதே நேரத்தில் ஜூலை மாதத்தில் தங்கத்தின் விலை சுமார் 15 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. வரும் காலங்களிலும் தங்கத்தின் விலையில் தங்கத்தின் விலை அதிகரிக்கும் போக்கு தொடரும் என்றும் அந்த நிறுவனம் சொல்கிறது. உலக அளவில் அமெரிக்க மத்திய வங்கிகளின் வட்டி விகிதம் தங்கத்தின் விலையை தீர்மானிக்கிறது. தங்கத்தின் விலையில் வட்டி விகிதங்கள் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும். வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்ற அச்சம் வரும்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கும். அதனால்தான் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி கெவின் வார்ஷ் ஆற்றிய உரைக்குப் பிறகு தங்கத்தின் விலை சரிவு ஏற்பட்டது. ஃபெடரல் ரிசர்வ் வரும் நாட்களில் ஃபெடரல் ரிசர்வ் தொடர்பான முடிவுகள் தங்கத்தின் விலையை தீர்மானிக்கும் என்கின்ற்னர். கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் படி 2026 ஆம் ஆண்டுக்குள் இறுதிக்குள் தங்கத்தின் விலை ஒரு ட்ராய் அவுன்ஸ் 4900 டாலரை எட்டலாம். இது தற்போதைய விலையான 4,550 டாலரை விட 8 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.தங்கம் விலை
கோல்ட்மேன் சாக்ஸ்
அந்நிய செலாவணி
சீனா
தங்கம் விலை கணிப்பு
அமெரிக்க மத்திய வங்கி