Dark Chocolates: டார்க் சாக்லேட் சாப்பிட்டால் மாதவிடாய் வலி குறைகிறதா? உண்மை என்ன?

  • சென்னை: டார்க் சாக்லேட்டை பெண்கள் அதிகம் பேர் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் என்ன தெரியுமா? அந்த சாக்லேட்டில் இருக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

    Advertisement

    பொதுவாகவே சாக்லேட் சாப்பிடுவது பற்களுக்குக் கேடு, உடலுக்கு ஒவ்வாதது என்று பெரியவர்கள் கூறுவதை நாம் கேட்டிருப்போம். ஆனால், இனிப்புச் சுவை குறைவாகவும், கொக்கோ (Cocoa) அளவை அதிகமாகவும் கொண்ட 'டார்க் சாக்லேட்' (Dark Chocolate) சாப்பிடுவது உடலுக்குத் தீங்கல்ல என்கிறார்கள் நவீன ஊட்டச்சத்து நிபுணர்கள்.

    Advertisement

    டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

    1. இதயத்தைப் பாதுகாக்கும்

    டார்க் சாக்லேட்டில் உள்ள 'ஃபிளவனாய்டுகள்' (Flavonoids) என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், இரத்த நாளங்களைச் சீராகச் சுருங்கி விரியச் செய்கின்றன. இதனால் உடலில் இரத்த ஓட்டம் சீரடைந்து, உயர் இரத்த அழுத்தம் (High BP) கணிசமாகக் குறைகிறது. வாரத்திற்கு இரண்டு முறை சிறிதளவு டார்க் சாக்லேட் சாப்பிட்டு வருபவர்களுக்கு இதய நோய் மற்றும் பக்கவாதம் (Stroke) ஏற்படும் அபாயம் பெருமளவு குறைவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    2. 'ஸ்ட்ரெஸ் பஸ்டர்'

    உங்களுக்கு வேலைப் பளு காரணமாக மன அழுத்தம் அல்லது கவலை அதிகமாக இருக்கிறதா? உடனே ஒரு துண்டு டார்க் சாக்லேட் சாப்பிடுங்கள். இது மூளையில் 'எண்டோர்பின்கள்' (Endorphins) மற்றும் 'செரட்டோனின்' (Serotonin) போன்ற மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்களைச் சுரக்கச் செய்கிறது. இதனால் அடுத்த சில நிமிடங்களிலேயே உங்கள் மனநிலை (Mood) மாறி, புத்துணர்ச்சி உண்டாகும்.

    Advertisement

    3. மூளையைச் சுறுசுறுப்பாக்கும்

    வயதாவது காரணமாக ஏற்படும் நினைவாற்றல் குறைபாட்டைத் தடுக்கும் சக்தி இதற்கு உண்டு. டார்க் சாக்லேட் சாப்பிடும்போது மூளைக்கான இரத்த ஓட்டம் அதிகரிப்பதால், கவனிப்புத் திறன், சுறுசுறுப்பு மற்றும் நினைவாற்றல் (Memory Power) கூர்மையடைகிறது.

    4. சர்க்கரை நோய்க்கு அருமருந்து

    டார்க் சாக்லேட் கசப்பாக இருப்பதால், இதில் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் 'இன்சுலின்' ஹார்மோனின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. இதனால், சர்க்கரை நோய் (Type 2 Diabetes) வருவதற்கான வாய்ப்புகள் குறைவதாக வியப்பூட்டும் தகவலை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    5. இளமை இதோ இதோ

    இதில் உள்ள கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள், சூரியனின் ஆபத்தான புற ஊதாக் கதிர்களிடம் (UV Rays) இருந்து நமது சருமத்தைப் பாதுகாக்கின்றன. சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, சுருக்கங்கள் விழுவதைத் தடுத்து என்றும் இளமையான தோற்றத்தைத் தருகிறது.

    Advertisement

    எவ்வளவு, எப்படிச் சாப்பிட வேண்டும்?

    டார்க் சாக்லேட் உடலுக்கு நல்லது என்பதால் அதை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக் கூடாது. லஞ்ச் பாக்ஸ் அளவில் தினமும் 30 முதல் 60 கிராம் (ஒன்று அல்லது இரண்டு சிறிய துண்டுகள்) மட்டுமே சாப்பிட வேண்டும்.

    நீங்கள் வாங்கும் டார்க் சாக்லேட்டின் பாக்கெட்டில் 70% அல்லது அதற்கும் அதிகமான கொக்கோ (70% Cocoa) இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதை உறுதி செய்து வாங்குவதே முழுமையான பலனைத் தரும்.

    மேலும் டார்க் சாக்லேட் சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் வரும் அடிவயிற்று வலி குறைவதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு அறிவியல் ரீதியாக சான்று இருக்கிறதா என தெரியவில்லை. ஆனாலும் இதை பெண்கள் மாதவிடாய் நேரத்தில் சாப்பிடுகிறார்கள்.

    Advertisement

    இனி சாக்லேட் சாப்பிடும்போது குற்ற உணர்ச்சி தேவையில்லை; அது டார்க் சாக்லேட்டாக இருந்தால் தாராளமாகச் சுவையுங்கள், ஆரோக்கியமாக வாழுங்கள்!

    English Summary

    Many women prefer eating dark chocolate, but do you know why? From boosting mood and reducing stress to supporting heart health and providing antioxidants, dark chocolate offers several health benefits. Here’s a look at why it is popular among women and the key advantages of including it in the diet in moderation.