டெல்லி: உலகம் முழுக்க இன்று சர்வதேச யோகா தினம் 2026 கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் யோகா செய்யும் போது சிலர் சில தவறுகளை செய்வர். அது அவர்களுக்கு ஆபத்தில் முடிந்துவிடும். அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த பலரும் யோகாசனங்களை ஆர்வத்துடன் கற்று வருகின்றனர். யோகா என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல, அது மூச்சுக்காற்றையும் மனதையும் ஒருநிலைப்படுத்தும் ஒரு உன்னதமான கலை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், முறையான வழிகாட்டுதல் இன்றி யோகா செய்வது நன்மையை விட தீமையையே அதிகம் விளைவிக்கும். குறிப்பாக ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் செய்யும் சில பொதுவான தவறுகள் தசைப்பிடிப்பு மற்றும் நீண்டகால உடல்நலப் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். அவற்றை தவிர்ப்பது எப்படி என்பதை பார்ப்போம்.
யோகாசனங்களின் போது மூச்சுப்பயிற்சி மிக முக்கியமானது. பலரும் கடினமான ஆசனங்களைச் செய்யும்போது தெரியாமல் மூச்சை அடக்கி வைக்கின்றனர். இது ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதோடு, மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவைக் குறைத்து தலைசுற்றலை ஏற்படுத்தும். எப்போதும் ஆசனங்களின் போது சீரான சுவாசத்தை பராமரிக்க வேண்டும். உடலை வளைக்கும்போது மூச்சை விடவும், நிமிரும்போது மூச்சை உள்ளிழுக்கவும் பழகிக்கொள்ளுங்கள். முறையான சுவாசம், தசைகளின் இறுக்கத்தைத் தளர்த்த இந்த மாதிரியான மூச்சுப்பயிற்சி உதவும். வயிறு நிறைந்திருக்கும்போது யோகா செய்வது செரிமான மண்டலத்தை கடுமையாகப் பாதிக்கும். உணவு உண்ட பிறகு ரத்த ஓட்டம் செரிமானப் பகுதிக்குச் செல்லும் நிலையில், யோகா செய்யும்போது அது தசைகளுக்குத் திசை மாற்றப்படுகிறது. இதனால் குமட்டல் மற்றும் வயிற்று வலி ஏற்படலாம். யோகா செய்வதற்கு குறைந்தது 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன்பே உணவை முடித்துவிடுவது நல்லது. அதிகாலையில் வெறும் வயிற்றில் யோகா செய்வது உடலுக்கு அதிகப்படியான புத்துணர்ச்சியையும் நெகிழ்வுத்தன்மையையும் கொடுக்கும். இது உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக வைத்திருக்க உதவும். யோகா என்றில்லை, எந்த ஒரு உடற்பயிற்சியையும் உணவு, டீ, காபி, ஜூஸ் உள்ளிட்டவைகளை சாப்பிட்டதும் செய்யவே கூடாது. டீ, காபி என்றால் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது இடைவெளி இருக்க வேண்டும். உணவு என்றால் 3 முதல் 4 மணி நேரம் இடைவெளிக்கு பிறகே யோகா, உடற்பயிற்சி செய்ய வேண்டும். யோகா என்பது ஒரு போட்டி அல்ல, அது ஒரு இதமான பயணம். சமூக வலைதளங்களில் பார்ப்பது போலவோ அல்லது அருகில் இருப்பவர் போலவோ உடலை வளைக்க முயற்சிப்பது தசைநார் கிழிதலுக்கு வழிவகுக்கும். ஒவ்வொருவரின் உடல் வாகு மற்றும் நெகிழ்வுத்தன்மை மாறுபடும் என்பதை உணர வேண்டும். உங்கள் உடல் கொடுக்கும் சிக்னல்களைக் கவனியுங்கள். வலி ஏற்பட்டால் உடனடியாக அந்த ஆசனத்தைத் தவிர்த்துவிட்டு ஓய்வெடுங்கள். மெதுவாகவும் நிதானமாகவும் பயிற்சியைத் தொடர்வதுதான் நீண்டகால பலன்களைத் தரும். ஆரோக்கியம் மேம்பட யோகா செய்தாலும், சில உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். முறையற்ற பயிற்சி பின்விளைவுகளை ஏற்படுத்தலாம். யோகா பயிற்சி முடித்த 30 நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சை பழச்சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம். இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, இழந்த எலக்ட்ரோலைட்டுகளை மீட்க உதவும். இது உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும். பொறுப்பு துறப்பு: இக்கட்டுரை பொதுவான தகவல்களை மட்டுமே வழங்குகிறது. எந்தவொரு பயிற்சியையும் தொடங்குவதற்கு முன் தகுதியான யோகா ஆசிரியர் அல்லது மருத்துவரை அணுகுவது அவசியம்.மூச்சை அடக்குவது மிகப்பெரிய தவறு
சாப்பிட்டவுடன் யோகா செய்தல்
மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடுவது
யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
தவிர்க்க வேண்டியவர்கள் காரணம் முதுகுத்தண்டு பாதிப்பு உள்ளவர்கள் முன்பக்கம் குனிந்து செய்யும் ஆசனங்கள் வலியை அதிகப்படுத்தும். அறுவை சிகிச்சை செய்தவர்கள் குறைந்தது 6 மாதங்கள் வரை கடினமான பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள் வயிற்றுப் பகுதியில் அழுத்தம் தரும் ஆசனங்களைத் தவிர்க்க வேண்டும். இதய நோயாளிகள் தலைகீழாகச் செய்யும் ஆசனங்கள் ரத்த அழுத்தத்தை உயர்த்தும். யோகாவுக்குப் பின் புத்துணர்ச்சி தரும் பானம்