Crystal Salt Vs Table salt: கல்லுப்பு vs தூளுப்பு: ஆரோக்கியத்திற்கு எது நல்லது?

  • சென்னை: கல் உப்பு மற்றும் தூள் உப்பு இதில் எது சிறந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம். உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள். அதே நேரத்தில் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதையும் மனதில் வைத்து இந்த உப்பை நாம் பயன்படுத்த வேண்டும்.

    Advertisement

    நம் அன்றாட சமையலில் தவிர்க்க முடியாத ஒரு பொருள் உப்பு. ஆனால், இன்று மளிகைக் கடைக்குச் சென்றால் "அயோடின் கலந்த சுத்திகரிக்கப்பட்ட தூளுப்பு" (Refined Iodized Salt) மற்றும் "பாரம்பரிய கல்லுப்பு" (Raw Sea Salt) என இரண்டு தேர்வுகள் நம் முன்னே நிற்கின்றன.

    Advertisement

    ஆரோக்கியமான வாழ்விற்கு இதில் எது உண்மையான அஸ்திவாரம்? தூளுப்பில் சேர்க்கப்படும் கெமிக்கல்கள் என்னென்ன? கல்லுப்பில் உள்ள தாதுக்கள் என்ன? என்பது குறித்த ஒரு சிறப்புச் செய்தி அலசல் இதோ:

    1. சுத்திகரிக்கப்பட்ட தூளுப்பு (Refined Salt): இதில் ஒளிந்திருக்கும் கெமிக்கல் நிஜம்!நவீன தொழில்நுட்பத்தால் கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டு, பளபளவென வெள்ளையாக மாற்றப்பட்டு நமக்குத் தூளுப்பாகக் கிடைக்கிறது. ஆனால், இந்தச் சுத்திகரிப்பு முறையின் போது உப்பின் அசல் தன்மை மாறுகிறது.

    தாதுக்கள் நீக்கம்: அதிக வெப்பநிலையில் உப்பு சுத்திகரிக்கப்படும் போது, அதில் இயற்கையாகவே இருக்க வேண்டிய உடலுக்கு நன்மை தரும் தாதுக்கள் (Minerals) அனைத்தும் முற்றிலும் அழிந்து விடுகின்றன. இறுதியில் எஞ்சுவது வெறும் சோடியம் குளோரைடு (Sodium Chloride) மட்டுமே.

    Advertisement

    ஆண்டி-கேக்கிங் ஏஜெண்டுகள் : தூளுப்பு ஈரப்பதத்தால் கட்டிப் பிடிக்காமல், எப்போதும் நைஸாகக் கொட்டுவதற்காக அதில் அலுமினியம் சிலிகேட் (Aluminium Silicate) அல்லது பொட்டாசியம் பெரோசயனைடு (Potassium Ferrocyanide) போன்ற இரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இவை உடலுக்குத் தேவையற்றவை.

    அயோடின் பிளஸ்: முன் காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட முன் கழுத்துக் கழலை (Goitre) நோயைத் தடுக்க இதில் செயற்கையாக அயோடின் சேர்க்கப்படுகிறது. ஆனால், இன்றைக்கு நாம் உண்ணும் மற்ற உணவுகளிலேயே தேவையான அயோடின் கிடைத்துவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    2. பாரம்பரிய கல்லுப்பு (Crystal Salt): இயற்கை தாதுக்களின் அற்புதம்!நம் முன்னோர்கள் பயன்படுத்திய கல்லுப்பு என்பது கடல் நீரை அப்படியே பாத்திகளில் கட்டி, சூரிய ஒளியில் உலர வைத்து இயற்கையான முறையில் தயாரிக்கப்படுவதாகும்.

    Advertisement

    இயற்கை தாதுக்களின் புகலிடம்: கல்லுப்பில் சோடியம் குளோரைடுடன் சேர்த்து உடலுக்குப் பசை தரும் மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, கந்தகம் போன்ற 80-க்கும் மேற்பட்ட அத்தியாவசியக் குறுந்தாதுக்கள் (Trace Minerals) இயற்கையாகவே நிறைந்துள்ளன.

    கெமிக்கல் இல்லாத தூய்மை: கல்லுப்பைத் தயாரிக்கும் போது செயற்கை நிறமூட்டிகளோ, கட்டிபிடிக்காமல் இருப்பதற்கான இரசாயனங்களோ (Anti-caking agents) சேர்க்கப்படுவதில்லை.

    இரத்த அழுத்தச் சமநிலை: தூளுப்பை விட கல்லுப்பில் சோடியத்தின் வீரியம் சற்றே குறைவாக இருப்பதால், இது உடலின் இரத்த அழுத்தத்தை (Blood Pressure) சட்டென்று உயர்த்தாமல் சீராக வைத்திருக்க உதவுகிறது.

    மருத்துவர்கள் மற்றும் உணவு நிபுணர்களின் பரிந்துரை என்ன?

    ஆரோக்கியமான உடலமைப்பிற்கு கல்லுப்பே மிகச் சிறந்தது என்று இயற்கை மருத்துவர்களும் உணவு நிபுணர்களும் ஒருமனதாகப் பரிந்துரைக்கின்றனர்.சமையலில் எப்படிப் பயன்படுத்தலாம்?

    குழம்பு, கூட்டு, சாம்பார், ரசம் போன்ற அனலில் கொதிக்கும் அனைத்து உணவுகளுக்கும் கல்லுப்பையே பயன்படுத்த வேண்டும். அது உணவோடு சேர்ந்து கரையும் போது தாதுக்கள் உடலுக்கு நேரடியாகக் கிடைக்கும்.பொரியல், சாலட், மோர் போன்ற உடனடியாக உப்பைக் கரைக்க வேண்டிய அவசரத் தேவைகளுக்கு மட்டும், கல்லுப்பை வீட்டிலேயே மிக்ஸியில் அரைத்துத் தூளாக்கிப் (Home-made Powder Salt) பயன்படுத்தலாம்.

    பளபளப்பாகவும் அழகாகவும் இருக்கும் தூளுப்பு நம் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல. பார்ப்பதற்குச் சற்றே நிறம் மங்கி கரடுமுரடாகக் காணப்படும் பாரம்பரிய கல்லுப்பே நம் உடலை நோய்களிலிருந்து காக்கும் உண்மையான அஸ்திவாரம்!

    English Summary

    Salt is an essential ingredient in everyday cooking, but choosing the right type is equally important for good health. Here’s a detailed look at the differences between Rock Salt and Table Salt, their health benefits, side effects, and why moderation is the key when consuming salt.