டெல்லி: பட்டதாரிகளுக்கான தொழில்நுட்பம் அல்லாத பிரபலப் பிரிவுகளில் (Non-Technical Popular Categories - Graduate) உள்ள பல்வேறு பணியிடங்களுக்குத் தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். வரும் அக்டோபர் 8ம் தேதி தொடங்கி வரும் நவம்பர் 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் 7-வது ஊதியக் குழுவின்படி ஊதிய நிலை லெவல் 5 மற்றும் லெவல் ஆறு ஆக இருக்கும்.
இந்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ரயில்வே தேர்வாணையம் (RRBs), பட்டதாரிகளுக்கான தொழில்நுட்பம் அல்லாத பிரபலப் பிரிவுகளில் (NTPC - Non-Technical Popular Categories) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தற்காலிக அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம் நிறுவனம்: ரயில்வே தேர்வாணையம் நிறுவன வகை: அரசு நிறுவனம் பணியின் பெயர்: தொழில்நுட்பம் அல்லாத பல்வேறு பட்டதாரி பணியிடங்கள் ( NTPC - Graduate Posts) மொத்த காலியிடங்கள்: 3,477 சம்பள நிலை: 7-வது ஊதியக் குழுவின் படி Level-5 மற்றும் Level-6 இதில் சம்பளத்தை பொறுத்தவரை லெவல் 5 பொறுத்தவரை Goods Guard, Senior Clerk cum Typist போன்ற பணிகளுக்கு அப்படைச் சம்பளம் ₹29,200, டிஏ அடிப்படைச் சம்பளத்தில் 50% அல்லது அதற்கு மேல் இருக்கும். வீட்டு வாடகைப்படி நீங்கள் வேலை செய்யும் நகரத்தைப் பொறுத்து 9%, 18%, அல்லது 27% வழங்கப்படும். போக்குவரத்துப் படியும் கிடைககும். தொடக்க மொத்தச் சம்பளம் தோராயமாக ₹45,000 முதல் ₹52,000 வரை இருக்கும் (நகரத்தை பொறுத்து மாறும்). அதேபோல் Level 6 ல் Commercial Apprentice, Station Master போன்ற பணிகள் உள்ளன. இவர்களுக்கு அடிப்படை சம்பளம் ₹35,400 அடிப்படைச் சம்பளம். பஞ்சப்படியான டிஏ சம்பளத்தில் 50% அல்லது அதற்கு மேல் இருக்கும். வீட்டு வாடகைப்படி 9%, 18%, அல்லது 27% ஆக இருக்கும.போக்குவரத்துப் படி , இரவு நேரப் பணிப்படி & பிற படிகள் வழங்கப்படும். வேலைக்கு சேர்ந்த முதல் மாதமே சுமார் ரூ.55,000 முதல் ₹65,000 வரை வாங்குவார்கள். எனினும் இரயில்வே பணியிடங்களில் ஸ்டேஷன் மாஸ்டர், குட்ஸ் கார்டு போன்ற பணியிடங்களுக்கு 'மைலேஜ் அலவன்ஸ்' மற்றும் இரவுப் பணி படிகள் தனியாகக் கிடைப்பதால் மொத்தச் சம்பளம் இப்போது குறிப்பிட்டதைவிட அதிகமாகவே இருக்க வாய்ப்பு உள்ளது. வயது வரம்பு & மருத்துவத் தகுதி: விரிவான அறிவிக்கை விரைவில் வரும். அதில் அறியலாம். --- முக்கிய தேதிகள்: விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 08.10.2026 (தற்காலிகமானது) விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.11.2026 (இரவு 23:59 மணி வரை) --- விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள தேர்வர்கள் [https://www.rrbapply.gov.in](https://www.rrbapply.gov.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்: ஆதார் மூலம் சரிபார்க்கப்படாத விண்ணப்பங்களுக்கு, ஆட்சேர்ப்புச் செயல்பாட்டின் ஒவ்வொரு கட்டத்திலும் விரிவான ஆய்வின் போது ஏற்படும் காலதாமதம் மற்றும் சிரமங்களைத் தவிர்க்க, ஆன்லைன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும்போது விண்ணப்பதாரர்கள் தங்களின் முதன்மை விவரங்களை ஆதாரைப் பயன்படுத்திச் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆதார் மூலம் வெற்றிகரமாகச் சரிபார்ப்பதை உறுதி செய்ய, ஆதாரில் உள்ள பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகியவை, பத்தாம் வகுப்பு தேர்ச்சிச் சான்றிதழில் உள்ள முழுப் பெயர் மற்றும் பிறந்த தேதியுடன் 100% சரியாகப் பொருந்துமாறு புதுப்பிக்கப்பட வேண்டும். அதேபோல், ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன், ஆதாரில் உள்ள சமீபத்திய புகைப்படம் மற்றும் பயோமெட்ரிக்ஸ் (கைரேகை மற்றும் விழித்திரை) விவரங்களையும் புதுப்பிப்பது அவசியமாகும். இந்த அறிவிப்பு முற்றிலும் தற்காலிகமான வழிகாட்டுதல் மட்டுமே. வரவிருக்கும் விரிவான மத்திய வேலைவாய்ப்பு அறிவிப்பு (CEN) குறித்து விண்ணப்பதாரர்களுக்குத் தெரியப்படுத்துவதற்காகவும், விண்ணப்பிப்பதற்குத் தேவையான சான்றிதழ்கள்/ஆவணங்களுடன் தயார் நிலையில் இருக்கவுமே இது வெளியிடப்பட்டுள்ளது. ஆட்சேர்ப்பு தொடர்பான அனைத்து விதிகள், நிபந்தனைகள், தகுதி வரம்புகள், நடைமுறைகள் மற்றும் பிற தேவைகள் ஆகியவை அனைத்து RRB-களின் பொதுவான இணையதமான https://rrb.indianrailways.gov.in இல் வெளியிடப்படும் விரிவான CEN No.06/2026 (மற்றும் அவ்வப்போது வெளியிடப்படும் திருத்தங்களின்படி) திட்டவட்டமாக இருக்கும். விண்ணப்பதாரர்கள் இந்தப் பொது இணையதளத்தில் இருந்து தனித்தனி RRB-களின் வலைப்பக்கங்களுக்குச் செல்லலாம்.'இந்தி பேசு.. இல்லனா வேலையை விட்டு போ'.. திமிராக பேசிய மேனேஜர்.. கன்னடத்தில் மன்னிப்பு கேட்டு வீடியா
ஆதார் சரிபார்ப்பு:
வெற்றிப்பயணம் திட்டத்தால் வியாபாரிகளுக்கு பெரிய சிக்கல்.. உள்ளுர் சந்தை முடங்கலாம்.. நெட்டிசன் பதிவு
ஆதார் விவரங்களை புதுப்பித்தல்:
பொது அறிவிப்பு: