வங்கிகளில் வேலைக்கு சேர விரும்புவோருக்கு மிகப்பெரிய குட்நியூஸ்.. 6,715 துணை மேலாளர் பணியிடம்

  • சென்னை: நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் 6,715 துணை மேலாளர் (PO) பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இன்று (ஜூலை 1) முதல் ஜூலை 21 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் செப்டம்பர் 2026 இல் அறிவிக்கப்படும் என்றும், ஆன்லைன் வழி முதன்மைத் தேர்வு அக்டோபர் 2026 இல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    வங்கிகளில் வேலைக்கு சேர விரும்புவோருக்கு மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 6715 காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற இருக்கிறது. வங்கி பணியில் சேருவதற்காக கடினமாக உழைத்த வருபவர்கள் இந்த அறிவிப்பிற்காகவே காத்திருந்தார்கள். அவர்களுக்கு இந்த அறிவிப்பு மிகவும் முக்கியமானது ஆகும். இதில் இடம் பெற்றுள்ள தகவல்கள் வங்கி பணியில் சேருவதற்காக விண்ணப்பிக்க விரும்புவோர் அறிய வேண்டியவை ஆகும். ஒரு டிகிரி மட்டும் படித்திருந்தால் போதும்.. நல்ல சம்பளம், நிரந்தமான வேலை, மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான சம்பளம் என வாழ்க்கை தரமே அடியோடு மாறும்.. எனவே இந்த வேலைகளுக்கு சேருவதற்கு போட்டியும் அதிகமாக இருக்கும். சரியாக முறையில் தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு இந்த தேர்வு கடினமாக இருக்காது. சரியான வழிகாட்டுதலுடன் படித்தால், கேரளா மற்றும் வடமாநிலத்தினரை போல் வங்கி பணியிலும் தமிழர்கள் ஜொலிக்கலாம். வாய்ப்புகளை சரியாக அடையாளம் கண்டு, அதில் முன்னேறுவது தான் ஜெயிக்க விரும்புவோருக்கு உள்ளே ஒரே வழி.. எனவே இந்த வாய்பை தவறவிடலாம் வங்கி பணியில் பலர் விண்ணப்பிக்க வேண்டும். இதன் விவரங்களை முழுமையாக பார்ப்போம்.

    Advertisement

    நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 6,715 துணை மேலாளர் (PO) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு (Degree) முடித்த தகுதியானவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

    விருப்பமுள்ளவர்கள் இன்று (ஜூலை 1) முதல் ஜூலை 21 வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

    விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும் ஜூலை 1 முதல் ஜூலை 21 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய விரும்பினால், ஆன்லைன் பதிவு முடிவடைந்த பிறகு 2 நாட்களுக்கு திருத்த விண்டோ (Edit Window) திறக்கப்படும்.

    Advertisement

    தேர்வுக்கான முன்னோட்டப் பயிற்சி (PET) மற்றும் முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் ஆகஸ்ட் 2026 இல் வெளியாகும்.

    ஆன்லைன் வழி முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam) ஆகஸ்ட் 2026 இல் நடத்தப்படும்.

    முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் செப்டம்பர் 2026 இல் அறிவிக்கப்படும்.

    முதன்மைத் தேர்வுக்கான (Main Exam) ஹால் டிக்கெட்டுகள் செப்டம்பர் 2026 இல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    ஆன்லைன் வழி முதன்மைத் தேர்வு அக்டோபர் 2026 இல் நடைபெறும்.

    முதன்மைத் தேர்வு முடிவுகள் மற்றும் ஆளுமைத் தேர்வு (Personality Test) ஆகியவை நவம்பர் 2026 இல் நடைபெறும்.

    Advertisement

    இறுதி கட்ட நேர்முகத் தேர்வு (Interview) நவம்பர் அல்லது டிசம்பர் 2026 இல் நடத்தப்படும்.

    தேர்ச்சி பெற்றவர்களுக்கான தற்காலிகப் பணி ஒதுக்கீடு (Provisional Allotment) ஜனவரி 2027 இல் வழங்கப்படும்.

    English Summary

    A notification has been issued for the recruitment of 6,715 Assistant Managers (Probationary Officers) across public sector banks nationwide. Applications are open from today (July 1) until July 21 for candidates holding a degree in any discipline. It has been announced that the results of the preliminary examination will be declared in September 2026, and the online main examination will be held in October 2026.