விமான நிலையங்களில் வேலை.. திருச்சியிலும் காலியிடம்! டிகிரி போதும்.. இன்றே கடைசி நாள்

  • சென்னை: இந்திய விமான நிலைய ஆணையத்தின் துணை நிறுவனமான ஏஏஐ கார்கோ லாஜிஸ்டிக்ஸ் மற்றும் அலைடு சர்வீசஸ் (AAICLAS) நிறுவனத்தில் 158 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. திருச்சி உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் பணியாற்றும் வாய்ப்பு உள்ள நிலையில், ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஆரம்ப சம்பளமாக மாதம் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும்.

    Advertisement

    இந்திய விமான நிலைய ஆணையத்தின் துணை நிறுவனமாக ஏஏஐ கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் உள்ளது. இந்திய விமான நிறுவனங்களில் செக்யூரிட்டி ஸ்கீரினர் போன்ற முக்கியமான நிர்வாக நடைமுறைகளை இந்த நிறுவனமே கையாள்கிறது.

    Advertisement

    உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான முனையங்களில் விமான சரக்கு வணிக வளர்ச்சியை நிர்வகிக்கும் பணியை இந்த லாஜிஸ்டிக்ஸ் (AAICLAS) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் காலியாக உள்ள 158 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? வயது போன்ற விவரங்களை பார்க்கலாம்.

    காலியிடங்கள்;

    டேராடூன்: 17
    கொல்கத்தா: 25
    பாட்னா: 37
    திருச்சி: 28
    கலிகட்: 17
    உதய்பூர்: 34

    கல்வித் தகுதி:

    அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பொதுப் பிரிவு, ஓபிசி மற்றும் EWS பிரிவினர் என்றால் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களும், எஸ்சி /எஸ்டி பிரிவினர் என்றால் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

    Advertisement

    மொழித் திறன்: ஆங்கிலம், இந்தி மொழிகளைப் படிக்கவும் பேசவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும், உள்ளூர் மொழியிலும் உரையாடும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

    வயது வரம்பு:

    01.05.2026 தேதிப்படி விண்ணப்பதாரரின் வயது 27 க்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவினர் என்றால் 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகளும் தளர்வுகள் அளிக்கப்படும்.

    சம்பளம்:

    முதல் ஆண்டு: ரூ.30,000 (மாதம்)
    இரண்டாம் ஆண்டு: ரூ.32,000
    மூன்றாம் ஆண்டு: ரூ.34,000

    தேர்வு முறை:

    தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    Advertisement

    பணியின் தன்மை:

    தேர்வு செய்யப்படும் நபர்கள், விமான நிலையங்கள் மற்றும் சரக்கு வளாகங்களில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள நியமனம் செய்யப்படுவார்கள். சரக்குகள் மற்றும் விமானத்தின் சரக்கு பகுதியில் வைக்கப்படும் பயணிகளின் பைகளை பாதுகாப்பு சோதனை செய்வது போன்ற பணிகள் இடம்பெறும்.

    விண்ணப்ப கட்டணம்: ரூ.750
    எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு: ரூ.100

    விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.06.2026. இன்றே கடைசி நாள் என்பதால் விருப்பமும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் காலதாமதம் செய்யாமல் உடனே விண்ணப்பம் செய்துவிடுங்கள். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.aaiclas.aero/uploads/career/AAICLAS7501778657978.pdf

    English Summary

    AAICLAS has announced recruitment for 158 Security Screener posts across various airports, including Trichy. Candidates with any bachelor's degree are eligible to apply. The recruitment offers an opportunity to work in the aviation sector under the Airports Authority of India's cargo subsidiary.