Accenture ஐடி வேலைவாய்ப்பு.. டிகிரி இருந்தாலே போதும்.. பெங்களூரில் நியமனம்

  • பெங்களூர்: பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றான அக்சென்ச்சரில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    Advertisement

    நம் நாட்டில், செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக Accenture உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது அப்ளிகேஷன் சப்போர்ட் இன்ஜினியர் (Application Support Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    Advertisement

    இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம். இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

    இந்த பணிக்கு Site Reliability Engineering உள்ளிட்டவற்றில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். சிஸ்டம் மானிட்டரிங் மற்றும் மேனேஜ்மென்ட் பிராக்டீஸ் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். ஸ்ட்ரிம்லைன் ஆபரேஷனல் டாஸ்க்கில் ஆட்டோமேஷன் டூல்ஸில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

    அதேபோல் அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். டெக்னிக்கல் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். சாப்ட்வேர் டிரபிள் சூட்டிங் டெக்னிக்ஸ் தெரிந்திருக்க வேண்டும்.. இதுதவிர பணிக்கு அடிப்படையாக இருக்கும் ஆங்கிலத்திலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

    Advertisement

    அதேபோல் தற்போதைய அறிவிப்பில் பணிக்கான மாதசம்பளம் அல்லது ஆண்டு சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கபப்டவில்லை. பணி அனுபவம், திறமை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.

    பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

    English Summary

    Accenture IT Jobs 2026: Accenture hiring for Application Support Engineer roles. 2-5 years experience candidates can apply for this roles. Selected candidates will be appointed in Bengaluru.