AIIMS Jobs: எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை! 2,668 காலியிடங்கள்! 10 டூ டிகிரி போதும்.. தேர்வர்கள் மிஸ் பண்ணிடாதீங்க

  • சென்னை: எய்ம்ஸில் வேலைவாய்ப்பு (AIIMS Jobs) அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு மருத்துவ நிறுவனங்களில் காலியாக உள்ள 2,668 குரூப்-பி மற்றும் குரூப்-சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10-ம் வகுப்பு முதல் பட்டமேற்படிப்பு முடித்தவர்கள் வரை இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

    Advertisement

    மத்திய அரசு வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் தேர்வர்களுக்கு AIIMS முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காமன் ரெக்ரூட்மென்ட் எக்ஸாமினேஷன்-5 (CRE-5) மூலம் 2,668 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தியா முழுவதும் உள்ள AIIMS மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு மத்திய அரசு மருத்துவ நிறுவனங்களில் தேர்வு செய்யப்படுபவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

    Advertisement

    இப்பணிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு 13.06.2026 முதல் தொடங்கியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03.07.2026-க்குள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் பணியமர்த்தப்படுவர்.

    பணியிடங்கள் விவரம்:

    லோயர் டிவிஷன் கிளார்க், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், அசிஸ்டெண்ட், அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபரேட்டர் போன்ற நிர்வாகப் பணிகள் - 803
    ஆப்ரேஷன் தியேட்டர் அசிஸ்டெண்ட் / டெக்னிஷியன் / டெக்னிக்கல் ஆபரேட்டர் - 303
    மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜிஸ்ட் / லேப் அட்டெண்டண்ட் / லேப் டெக்னிஷியன் - 231
    ஹாஸ்பிட்டல் அட்டெண்டண்ட் தரம் III / ஆபீஸ் அட்டெண்டண்ட் / எம்டிஎஸ் (MTS) / குக் / டெஸ்ட் அட்டெண்டண்ட் - 161
    பெர்சனல் அசிஸ்டெண்ட் / ஸ்டெனோகிராபர் / பிரைவேட் செக்ரட்டரி - 161

    Advertisement

    மெடிக்கல் ரெக்கார்ட் டெக்னிஷியன் / கோடிங் கிளார்க் - 141
    ஸ்டோர் கீப்பர் / ஜூனியர் ஸ்டோர் ஆபீசர் - 89
    சீனியர் நர்சிங் ஆபீசர் / ஏஎன்எம் (ANM) / ஸ்டாஃப் நர்ஸ் - 73
    பார்மசிஸ்ட் / டிஸ்பென்சிங் அட்டெண்டண்ட் - 66
    ஜூனியர் இன்ஜினியர் (சிவில் / எலக்ட்ரிக்கல் / ஏசி & ஆர்) - 125

    கல்வித் தகுதி

    பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித் தகுதியானது மாறுபடும். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ (ITI), ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, DMLT / B.Sc MLT, ANM, B.Sc. Nursing, D.Pharm / B.Pharm, டிப்ளமோ, B.E / B.Tech அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

    Advertisement

    வயது வரம்பு:

    பணியிடங்களுக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடும். வயது கணக்கிடப்படும் முக்கிய தேதி ஜூலை 3, 2026 ஆகும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓபிசி (NCL) பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு பிரிவினரின் அடிப்படையில் 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு வழங்கப்படுகிறது. முன்னாள் ராணுவத்தினருக்கு மத்திய அரசின் விதிமுறைகளின்படி சலுகைகள் அளிக்கப்படும்.

    தேர்வு முறை

    தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

    * கணினி அடிப்படையிலான தேர்வு (CBT)
    * தேவைப்படும் பதவிகளுக்கு தட்டச்சு அல்லது சுருக்கெழுத்துத் தேர்வு (Typing/Stenography Test) / உடற்தகுதித் தேர்வு (PST/PET)
    * சான்றிதழ் சரிபார்ப்பு

    Advertisement

    எங்கு பணியமர்த்தப்படுவார்கள்?

    தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நாடு முழுவதும் உள்ள AIIMS மருத்துவமனைகள் மற்றும் மத்திய அரசு மருத்துவ நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவார்கள். இதில் AIIMS டெல்லி, மதுரை, போபால், புவனேஸ்வர், ஜோத்பூர், நாக்பூர், ராய்ப்பூர், ரிஷிகேஷ், கோரக்பூர் உள்ளிட்ட பல்வேறு AIIMS நிறுவனங்களும், ESIC, ICMR, சப்தர்ஜங் மருத்துவமனை, டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனை உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களும் அடங்கும்.

    விண்ணப்பக் கட்டண விவரம்:

    எஸ்சி / எஸ்டி / பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (ST/SC/EWS): ரூ. 2400/-
    இதர பொது மற்றும் ஓபிசி பிரிவினர் (General/OBC): ரூ. 3000/-
    கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன் நெட் பேங்கிங், டெபிட்/கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம்.

    Advertisement

    முக்கிய தேதிகள்

    ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடக்கம்: 13.06.2026
    விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.07.2026
    தேர்வெழுத தகுதி பெற்ற விண்ணப்ப நிலவரம் வெளியீடு: 11.07.2026
    எழுத்துத் தேர்வு நடைபெறும் நாட்கள்: 25.07.2026 முதல் 27.07.2026 வரை

    எவ்வாறு விண்ணப்பிப்பது?

    தகுதியான விண்ணப்பதாரர்கள் https://AIIMSexams.ac.in/ என்ற எய்ம்ஸ் இணையதளத்திற்குச் சென்று, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் படித்துப் பார்த்து 03.07.2026-க்குள் தங்களது விவரங்களைச் சரியாக உள்ளீடு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

    அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படிக்க: https://drive.google.com/file/d/1YkHvqToAOjcCqXJSZ-KTi85aLqdS7PCV/view?usp=sharing

    English Summary

    AIIMS Jobs: AIIMS has invited online applications for 2,668 Group B and C vacancies under CRE-5. Candidates with qualifications from Class 10 to postgraduate degrees can apply. The application process began on June 13 and will close on July 3, 2026.