இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை.. 1.80 லட்சம் சம்பளம்! என்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்!

  • சென்னை: இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலாளர், ஜூனியர் எக்சிகியூட்டிவ் என பல்வேறு பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 389 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. என்ஜினியரிங் முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ. 40 ஆயிரம் முதல் ரூ.1.80 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த விவரங்களை இங்கு காணலாம்.

    Advertisement

    இந்திய விமன நிலைய ஆணையமான ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 389 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

    Advertisement

    பணியிடங்கள் விவரம்:

    மேலாளர் (என்ஜியரிங் - சிவில்) - 145
    எலக்ட்ரிக்கல் - 16
    ஃபைனான்ஸ் - 34
    ஐடி - 05
    ஆர்க்கிடெக்‌ஷர் - 04
    சட்டம் - 02

    தீயணைப்புச் சேவைகள் - 14
    செயல்பாடுகள் - 28
    வணிகம் - 09
    நிறுவனத் திட்டமிடல் & மேலாண்மைச் சேவைகள் - 01

    கார்ப்பரேஷன் கம்யூனிகேஷன்ஸ் - 02
    ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (நிதி) - 36
    சட்டம் - 06
    ஆபரேஷன்ஸ் - 79
    நில அளவை & வரைபடவியல் - 08

    கல்வித் தகுதி:

    பிஇ / பிடெக், பி.ஆர்க், எல்.எல்.பி, எம்பிஏ / சிஎப்ஏ உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சிவில் இன்ஜினியரிங் மேலாளர் பணிக்கு சிவில் பிரிவில் பொறியியல் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதே துறையில் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். ஜூனியர் எக்ஸ்கியூட்டிவ் ஃபைனான்ஸ் பணிக்கு எம்பிஏ முடித்து இருக்க வேண்டும். அல்லது ஃபைனான்ஸ் பிரிவில் முது நிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் பணி அனுபவம் தேவையில்லை.

    Advertisement

    வயது வரம்பு

    மேனேஜர் பணிக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும்.
    ஜூனியர் எக்சிகியூட்டிவ் பணிக்கு அதிகபட்ச வயது வரம்பு 27 ஆகும்.
    அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகளும் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

    சம்பளம் எவ்வளவு:

    தேர்வு செய்யப்படும் மேலாளர் அளவிலான பணிக்கு மாதம் ரூ. 60,000 முதல் 1,80,000 வரை வழங்கப்படும். இதே போன்று, ஜூனியர் எக்சிகியூட்டிவ் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை வழங்கப்படும்.

    Advertisement

    தேர்வு முறை:

    கணிணி வழியிலான ஆன்லைன் தேர்வு (ஆப்ஜெக்டிவ் டைப்), சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விண்ணப்ப கட்டணம்

    விண்ணப்ப கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினர், பெண்கள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. ஆன்லைன் வழியாக விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கால அவகாசம் தொடங்கும் நாள் 08.08.2026 ஆகும். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 07.09.2026 ஆகும்.

    அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Detailed%20Advertisement%2012-2026-CHQ.pdf

    English Summary

    Airports Authority of India Job: A recruitment notification has been released by the Airports Authority of India. Positions such as Manager and Junior Executive are set to be filled, with a total of 389 vacancies available. Engineering graduates are eligible to apply for these roles. Selected candidates will receive a monthly salary ranging from ₹40,000 to ₹1.80 lakh.