மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. சென்னையிலே பணியிடம்.. மாதம் 1.29 லட்சம் சம்பளம்.. செம வாய்ப்பு

  • சென்னை: மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆர்மர்டு வெஹிக்கிள்ஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1,213 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யபப்டுபவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1.29 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.

    Advertisement

    ஆர்மர்டு வெஹிக்கிள்ஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம் (AVNL) மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு முக்கிய பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனமாகும். சென்னையின் ஆவடியை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில், இந்திய ராணுவத்திற்கான நவீன டாங்கி, கவச வாகனங்கள் மற்றும் போர் வாகனங்களை உள்நாட்டிலேயே தயாரித்து, மேம்படுத்தும் நிறுவனமாக இருந்து வருகிறது.

    Advertisement

    தற்போது இந்த நிறுவனத்தில் 1,213 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த பணியிடங்களுக்கு டிப்ளமோ, டிகிரி மற்றும் என்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

    பணியிடங்கள் விவரம்:

    இளநிலை தொழில்நுட்பப் பணியாளர், இளநிலை மேலாளர், உதவி மேலாளர், துணை மேலாளர், மூத்த மேலாளர், துணைப் பொது மேலாளர், கூடுதல் பொது மேலாளர், ஆலோசகர் என பல்வேறு பிரிவிகளில் மொத்தம் 1,213 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னை ஆவடி, மத்தியப் பிரதேசம் ஜபல்பூர், தெலங்கானா மேடக், மகாராஷ்டிரா அம்பர்நாத் ஆகிய இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

    Advertisement

    கல்வித் தகுதி

    பணிக்கு ஏற்ப கல்வித் தகுதியானது மாறுபடும். டிப்ளமோ, டிகிரி மற்றும் என்ஜினியரிங் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். கல்வித் தகுதி குறித்த முழு விவரங்களை இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பில் தெரிந்துகொள்ளலாம்.

    வயது வரம்பு

    இளநிலை தொழில்நுட்பப் பணியாளர் முதல் துணை மேலாளர் வரையிலான பணியிடங்களுக்கு அதிகபட்சம் 30 வயதுக்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்க முடியும். மூத்த மேலாளர் மற்றும் அதற்கு மேற்பட்ட பணிகளுக்கு 65 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்.சி எஸ்டி பிரிவினர் என்றால் 5 ஆண்டுகளும், ஓபிஎசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

    Advertisement

    சம்பளம் எவ்வளவு?

    இளநிலை தொழில்நுட்பப் பணியாளர் - ரூ.25,050
    இளநிலை மேலாளர் - ரூ.34,500
    உதவி மேலாளர் - ரூ.45,000
    துணை மேலாளர் - ரூ.55,500
    மூத்த மேலாளர் - ரூ.76,500
    துணைப் பொது மேலாளர் - ரூ.87,000
    கூடுதல் பொது மேலாளர் - ரூ.1,08,000
    ஆலோசகர் - ரூ.1,29,000

    தேர்வு முறை

    விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, தொழில் திறன் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விண்ணப்பக் கட்டணம்

    இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். பொதுப்பிரிவினர் என்றால் ரூ.300 கட்டணம் செலுத்த வேண்டும்.
    பெண்கள், பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

    Advertisement

    விண்ணப்பிக்க கடைசி நாள்

    தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://avnl.co.in/ பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலமாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இது நிரந்தர பணியிடம் கிடையாது. ஒப்பந்த பணியாகும். விண்ணப்பிக்க கடைசி நாள் 25.07.2026 ஆகும்.

    அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படிக்க: https://g03.tcsion.com//per/g03/pub/726/EForms/image/ImageDocUpload/71161/6/801240248.pdf

    English Summary

    AVNL job: A recruitment notification has been issued by Armoured Vehicles Nigam Limited, which operates under the Union Ministry of Defence. A total of 1,213 vacancies are being filled. Selected candidates will receive a monthly salary ranging from ₹25,000 to ₹1.29 lakh. Details regarding eligibility and other information can be found here.