Bank of Baroda: மாதம் 85 ஆயிரம் சம்பளத்தில் வங்கியில் வேலை.. 2,482 பணியிடங்கள்.. நாளை தான் கடைசி நாள்!

  • சென்னை: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் (Bank of Baroda) 2,482 லோக்கல் ஆபிசர் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த பணியிடங்களுக்கு விண்ணபிக்க நாளை தான் கடைசி நாள் ஆகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள். இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும்.

    Advertisement

    நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பேங்க் ஆப் பரோடா வங்கி. வதோதராவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகள் உள்ளன. கடந்த மாதம் இந்த வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது.

    Advertisement

    பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் இந்த அறிவிப்பு, வங்கி வேலைக்காக தயாராகி வரும் தேர்வர்களுக்கு சூப்பர் சான்ஸ் ஆக பார்க்கப்படுகிறது. இதற்கு எப்படி விண்னப்பிக்கலாம்? என்னென்ன தகுதிகள் என்ற விவரங்களை பார்க்கலாம்.

    பணியிடங்கள் விவரம்:

    நாடு முழுக்க மொத்தம் 2,482 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

    மாநில வாரியாக..

    தமிழ்நாடு - 132, ஆந்திர பிரதேசம் - 80, அருணாச்சலப் பிரதேசம் - 20, அஸ்ஸாம் - 40 கோவா - 21, குஜராத் - 1,185, ஜம்மு-காஷ்மீர் - 15, கர்நாடகம் - 418, கேரளா - 49, மகாராஷ்டிரா - 218, மணிப்பூர் - 15, மேகாலயா - 15, மிசோரம் - 15, நாகாலாந்து - 15, ஒடிசா - 100, பஞ்சாப் - 34, சிக்கிம் - 10, தெலுங்கானா - 50, திரிபுரா - 8, மேற்கு வங்கம் - 42 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

    Advertisement

    கல்வித் தகுதி:

    இப்பணியிடங்களுக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் மொழி தெரிந்து இருக்க வேண்டும். உதாரணமாக தமிழ்நாட்டில் உள்ள 134 பணியிடங்களுக்கும், தமிழ் மொழி கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டும். ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட கமர்ஷியல் வங்கிகளில் குறைந்தது 1 ஆண்டாவது பணியாற்றியிருக்க வேண்டும்.

    வயது வரம்பு:

    வயது வரம்பை பொறுத்தவரை 1.8.2026 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி உச்ச வயது வரம்பில் சலுகைள் வழங்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

    Advertisement

    சம்பளம் எவ்வளவு:

    சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும்.

    தேர்வு முறை:

    ஆன்லைன் டெஸ்ட் / மல்டிபிள் ரவுண்ட்ஸ் டெஸ்ட், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    தேர்வு நடைபெறும் இடங்கள்:

    நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தமிழ்நாட்டில்,

    சென்னை
    மதுரை
    திருநெல்வேலி
    சேலம்
    வேலூர்
    கோவை
    திருச்சி
    விருதுநகர்
    தஞ்சாவூர்
    கடலூர்
    கன்னியாகுமரி/நாகர்கோவில்
    நாமக்கல்

    விண்ணப்பக் கட்டணம்:

    விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தவரை பொதுப் பிரிவினருக்கு ரூ.850 என்றும், பெண்கள், எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு ரூ.175 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். https://bankofbaroda.bank.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நாளை 7 ஆம் தேதி தான். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.

    தேர்வு அறிவிப்பினை படிக்க: https://bankofbaroda.bank.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2026/26-08/Advertisement-18-04.pdf

    English Summary

    Bank of Baroda: A notification was issued to fill 2,482 vacancies for the post of Local Officer at Bank of Baroda. Tomorrow is the last day to apply for these positions; therefore, those who have not yet applied should do so immediately. Candidates selected for these roles will receive a monthly salary of up to ₹85,920.