சென்னை: நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான, பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 779 கிரெடிட் அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1.20 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.
இந்தியாவில் உள்ள முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பேங்க் ஆப் இந்தியா. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. இந்த வங்கியில் காலியாக உள்ள கிரெடிட் ஆஃபிசர் பணியிடங்களை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
* கிரெடிட் ஆஃபிசர் (MMGS-II) - 677 அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது சிஏ / சிஎம்ஏ/ சிஎஸ்/சிஎப்ஏ போன்ற படிப்புகள் முடித்தவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வங்கி, நிதி, வர்த்தகம், மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் முதுநிலைப் பட்டம் அல்லது கிரெடிட் தொடர்பான சான்றிதழ்கள் இருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும். பணி அனுபவமும் அவசியம். கிரெடிட் ஆஃபிசர் (SMGS-IV) 7 ஆண்டுகள் வரை பணியாற்றியிருப்பது அவசியம். குறைந்தது 4 ஆண்டுகள் MSME உள்ளிட்ட துறைகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை, 01.06.2026 அன்றைய தேதிப்படி கணக்கிடப்படும். பணியிடங்களுக்கு தகுந்தபடி வயது வரம்பு மாறுபடும். அதிகபட்சமாக 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளத்தை பொறுத்தவரை கீழே உள்ள விவரங்கள் படி வழங்கப்படும். * கிரெடிட் ஆபிசர் (GBO பிரிவு) - MMGS-II - ரூ. 64,820 - 93,960 வரை வழங்கப்படும். ஆன்லைன் எக்ஸாம், நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு ரூ.175 விண்ணப்ப கட்டணம் ஆகும். விண்ணப்பிக்க வரும் 20.07.2026 கடைசி நாளாகும். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படித்து தெரிந்துகொள்ளலாம். அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படிக்க: https://bankofindia.bank.in/காலிப்பணியிடங்கள்
* கிரெடிட் ஆஃபிசர் (MMGS-III) - 61
* கிரெடிட் ஆஃபிசர் (SMGS-IV) - 41 என மொத்தம் 779 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.கல்வித் தகுதி:
வயது வரம்பு:
சம்பளம் எவ்வளவு?
* கிரெடிட் ஆபிசர் (GBO பிரிவு) - MMGS-III - ரூ. 85,920 - 1,05,280 வரை வழங்கப்படும்.
* கிரெடிட் ஆபிசர் (GBO பிரிவு) - SMGS-IV - ரூ. 1,02,300 - 1,20,940 வரை வழங்கப்படும்.தேர்வு முறை: