மாதம் 85 ஆயிரம் சம்பளம்.. மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை.. டிகிரி போதும்!

  • சென்னை: மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிதித்துறை, சட்டத்துறை, தகவல் தொழில்நுட்பம் என பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.85 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.

    Advertisement

    மத்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்று நேஷனல் இன்சூரன்ஸ் இந்தியா லிமிடெட்டு நிறுவனம். மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த காப்பீட்டு நிறுவனம் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. நாடு முழுவதும் காப்பீட்டு சேவையில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    Advertisement

    நிர்வாக அதிகாரி பணியிடங்கள்

    மத்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் என்பதால், இந்த நிறுவனம் வெளியிடும் வேலை வாப்பு அறிவிப்பு தேர்வர்கள் மத்தியில் அதிகம் கவனம் பெறுகிறது. காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அவ்வப்போது உரிய அறிவிப்புகளை வெளியிட்டு இந்த காப்பீட்டு நிறுவனம் பணியிடங்களை நிரப்புகிறது. அந்த வகையில் தற்போது நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

    பணியிடங்கள் விவரம்:

    நிர்வாக அதிகாரிகள் (பொதுப்பிரிவு & சிறப்புப் பிரிவு)
    நிதித்துறை - 20
    சட்டத்துறை - 20
    தகவல் தொழில்நுட்பம் - 10
    வாகனப் பொறியாளர்கள் - 20
    இடர் மதிப்பீட்டுப் பொறியாளர்கள் - 28
    நிறுவனச் செயலாளர்கள் - 02
    வேளாண்மை - 20
    தகவல் தொழில்நுட்பம் - 01
    பொதுப்பிரிவு - 200

    Advertisement
    SBI Job: எஸ்பிஐ வங்கியில் அதிகாரி வேலை.. 207 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

    கல்வித் தகுதி:

    பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித் தகுதி மாறுபடும். ஏதாவது ஒரு டிகிரி, பி.இ/ பி.டெக், எல்.எல்.பி, எம்.இ / எம்.டெக், எம்.சி.ஏ, சிஎஸ்/எப்சிஎஸ் உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    வயது வரம்பு:

    21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் , மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பு சலுகை உண்டு.

    சம்பளம் எவ்வளவு?

    தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.82,485 சம்பளம் வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு என மூன்று கட்ட தேர்வுகளுக்கு பிறகு தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    Advertisement
    உச்ச நீதிமன்றத்தில் வேலை.. மாதம் ரூ.35,400 சம்பளம்.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

    தேர்வு மையங்கள்:

    சென்னை, கோவை, ஈரோடு, குமரி, மதுரை, சேலம், தஞ்சை, திருச்சி, நெல்லை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய நகரங்களில் நடைபெறும்.

    விண்ணப்ப கட்டணமாக ரூ.1,000- செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு ரூ.250 கட்டணம் ஆகும். ஆன்லைன் வழியாக கட்டணம் செலுத்தலாம்.விண்ணப்பிக்க வரும் 28.10.2026 கடைசி நாளாகும்.

    தேர்வு அறிவிப்பினை படிக்க: https://nationalinsurance.nic.co.in/sites/default/files/2026-10/NICL%20AO%20Recruitment%20Advertisment%202026-27.pdf

    English Summary

    Central Government insurance company Job: A job notification has been released for a Central Government insurance company. Vacancies are to be filled across various departments, including Finance, Legal, and Information Technology. Selected candidates will receive a monthly salary of ₹85,000.