சென்னை: மத்திய அரசின் கீழ் செயல்படும் (CSIR-NPL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 20 டெக்னீஷியன் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 10 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்பமே ரூ.44 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இது குறித்த விவரங்களை இங்கே காணலாம்.
மத்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனம் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) தேசிய இயற்பியல் ஆய்வகம் ஆகும். இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. டெக்னீஷியன் பணியிடங்களானது நிரப்பப்பட உள்ளது. தேர்வு செய்யப்படுபவர்கள் டெல்லியில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த பணியிடங்கள் அனைத்தும் நிரந்தர (Regular) பணியிடங்களாகும்.
* டெக்னீஷியன் (எலெக்ட்ரானிக்ஸ்) - 10 விண்ணப்பதாரர்கள் அறிவியல் பாடங்களுடன் 10-ம் வகுப்பில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட தொழிற்பிரிவில் பின்வரும் தகுதிகளில் ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும்: * அங்கீகரிக்கப்பட்ட ஐடிஐ / தேசிய அல்லது மாநில தொழிற்சான்றிதழ் வயது வரம்பை பொறுத்தவரை 30.06.2026 அன்று நிலவரப்படி, கணக்கில் கொள்ளப்படும். இதன்படி, குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவர்களும், அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருப்பவர்களும் விண்ணப்பிக்க முடியும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். இதன்படி, * எஸ்சி / எஸ்டி - 5 ஆண்டுகள் இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் டெக்னீஷியன்களுக்கு மாதம் சுமார் ரூ.44,428 வழங்கப்படும். * எழுத்துத் தேர்வு * எஸ்சி / எஸ்டி / மாற்றுத்திறனாளிகள் / முன்னாள் ராணுவத்தினர் - கட்டணம் இல்லை ஆஃப் லைன் மூலமாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தை CSIR-NPL அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, தேவையான சான்றிதழ்களின் சுயசான்றொப்ப நகல்கள், புகைப்படம் மற்றும் கட்டண டிமாண்ட் டிராஃப்ட் (தேவையெனில்) ஆகியவற்றுடன் அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 30 ஆம் தேதிக்குள் சென்றடைய வேண்டும். விண்ணப்ப உறையின் மீது அனுப்ப வேண்டிய முகவரி: Senior Controller of Administration, 10-ம் வகுப்பு மற்றும் ஐடிஐ தகுதி பெற்றவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் நிரந்தர வேலை பெற இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். ஆர்வமுள்ளவர்கள் நாளைக்குள் விண்ணப்பித்து விடுங்கள்.காலிப்பணியிட விவரம்
* டெக்னீஷியன் (எலெக்ட்ரிக்கல்) - 5
* டெக்னீஷியன் (COPA) - 2
* டெக்னீஷியன் (மல்டிமீடியா, அனிமேஷன் & ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்) - 1
* டெக்னீஷியன் (டிஜிட்டல் போட்டோகிராபர் / போட்டோகிராபர்) - 1
* டெக்னீஷியன் (மெக்கானிக் மோட்டார் வாகனம்) - 1 என மொத்தம் 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.கல்வித் தகுதி
* அல்லது 2 ஆண்டுகள் முழுநேர Apprenticeship பயிற்சி
* அல்லது அதே துறையில் 3 ஆண்டுகள் பணி அனுபவம்வயது வரம்பு
* ஓபிசி (NCL) - 3 ஆண்டுகள்
* மாற்றுத்திறனாளிகள் - விதிகளின்படி
* முன்னாள் ராணுவத்தினர் - அரசின் விதிப்படிசம்பளம் எவ்வளவு?
தேர்வு முறை
* தொழிற்திறன் (Trade Test) மூலமாக தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.விண்ணப்பக் கட்டணம்
* மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் - ரூ.500 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை, Demand Draft மூலம் Director, National Physical Laboratory, New Delhi என்ற பெயரில் செலுத்த வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை
"APPLICATION FOR THE POST OF TECHNICIAN (1) - (Post Code No.___)" என்று குறிப்பிட வேண்டும்.
CSIR - National Physical Laboratory,
Dr. K.S. Krishnan Marg,
New Delhi - 110012