ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் காலியாக உள்ள 120 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்த விவரங்களை இங்கு விரிவாக காணலாம்.
ஈரோடு மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் கிராம ஊராட்சி அளவில் காலியாக உள்ள 120 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்றாக எழுதப் படிக்கவும் மற்றும் கணக்கிடும் திறன் உடையவர்களாகவும் இருத்தல் வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது நிரம்பியவராகவும் 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும் இந்த பணியிடங்களுக்கு அனுபவம் கோரப்பட்டுள்ளது. சுய உதவிக்குழு ஊக்குநராக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். ஊராட்சி அளவிலான கூட்டமைப்பைச் சார்ந்த பெண் சுய உதவிக்குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும். மக்கள் நிலை ஆய்வால் கண்டறியப்பட்ட இலக்கு மக்களாக இருத்தல் வேண்டும். கணினி திறன் மற்றும் இரு சக்கர வாகனம் ஓட்ட தெரிந்த ஒட்டுநர் உரிமம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆண்ட்ராய்டு கைபேசி (Android phone) வைத்திருப்பவர்களாகவும், SMS மற்றும் whatsapp- ல் செய்தி அனுப்பவும், செயலி இயக்கும் திறன் பெற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும். வங்கிகளுக்குச் சென்று பரிவர்த்தனைகள் செய்யவும், கடன் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யவும் அனுபவம் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். தகவல் தொடர்பு திறன் உடையவர்களாக இருத்தல் வேண்டும். காலியிடங்கள் உள்ள ஊராட்சிகளில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். தேர்வு செய்யப்படும் பணியாளர் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள். தகுதியுள்ள நபர்கள் உரிய சான்றிதழ் நகல்களுடன் நேரிலோ அல்லது தபாலிலோ சம்பந்தப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு 15.06.2026 ஆம் தேதிக்குள் அனுப்ப தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஊராட்சி அளவிலான காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார அளவிலான கூட்டமைப்பு அலுவலகத்தினை அணுகி தகவல் பெற்றுக்கொள்ளலாம். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும். எழுத்து தேர்வு 75 மதிப்பெண்களுக்கும், நேர்முகத்தேர்வு 25 மதிப்பெண்களுக்கும் நடைபெறும். மாவட்ட அளவிலான குழு இந்த நேர்முகத்தேர்வை நடத்தும். ஊதியமாக Honorarium - ரூ.2,500 வழங்கப்படும்.கல்வித் தகுதி:
வயது வரம்பு:
அனுபவம்:
பிற தகுதிகள்:
பிற விவரங்கள்:
தேர்வு முறை: