ஒரே வருஷத்துல உங்க வாழ்க்கை ஓஹோன்னு மாறிடும்! ஜெர்மன் நாட்டில் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது?

  • சென்னை: ஜெர்மன் நாட்டில் பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist), கார் தொழில்நுட்ப வல்லுநர் (Car Technician), வணிக ரீதியான தொழில்நுட்ப வல்லுநர் (Commercial Techniclan) மற்றும் லாரி ஓட்டுநர் (Truck driver) பணிக்கு பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள் எனவும், விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

    Advertisement

    OMCL என்று சுருக்கமாக அழைக்கப்படும் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மூலம் வேலைநாடும் இளைஞர்களுக்கு அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் அமைப்பாக செயல்படுகிறது.

    Advertisement

    போலி முகவர்களை நம்பி வேலை தேடிசென்று யாரும் ஏமாறக்கூடாது என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்ல உதவுகிறது.

    வெளிநாடுகளில் உள்ள சரியான பணிக்கு குறிப்பிட்ட நபர் தகுதி பெற்றால், அவர்கள் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமே செய்து தருகிறது. அதேபோல் தேவைப்பட்டால் வேலைக்கு தேவையான பயிற்சிகளையும் வழங்குகிறது. அந்த வகையில் ஜெர்மன் நாட்டில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தமிழக அரசின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," ஜெர்மன் நாட்டில் பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist), கார் தொழில்நுட்ப வல்லுநர் (Car Technician), வணிக ரீதியான தொழில்நுட்ப வல்லுநர் (Commercial Techniclan) மற்றும் லாரி ஓட்டுநர் (Truck driver) பணியில் சேர விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    Advertisement

    ஜெர்மனியில் பிசியோதெரபிஸ்ட். கார் தொழில்நுட்ப வல்லுநர், வணிக ரீதியான தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் லாரி ஓட்டுநர் பணிக்காக வேலைவாய்ப்புத் தேவைப்பட்டியல் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் பெறப்பட்டுள்ளது.

    பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist) பணிக்கு தொடர்புடைய கல்வித் தகுதியுடன் ஜெர்மன் மொழியில் B2 நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கார் தொழில்நுட்ப வல்லுநர் (Car Technician) மற்றும் வணிக வாகனத் தொழில்நுட்ப வல்லுநர் (Commercial Vehicle Technician) பணிகளுக்கு தொடர்புடைய தொழில்நுட்பக் கல்வித் தகுதியுடன் ஜெர்மன் மொழியில் A2 நிலை தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். லாரி ஓட்டுநர் (Truck Driver) பணிக்கு உரிய ஓட்டுநர் உரிமத்துடன் ஜெர்மன் மொழியில் A2 நிலை தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

    Advertisement

    எனவே, தகுதியுள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளைநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் omclgerman2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் விவரங்களை 15.11.2026 க்குள் சமர்ப்பிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும், ஊதியம் மற்றும் பணிவிவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளமான www.omcmanpower.tn.gov.in மற்றும் 044- 22502267/6379179200/ 9566239685 என்ற தொலைபேசி எண்களின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்." எனக் கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Tamil Nadu Overseas Manpower Corporation invites applications for four job categories in Germany. Eligible candidates can apply before November 15, 2026.